AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!”.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!

தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கனஅடி நீர் திறக்கக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையிலும், நீர் திறக்க இயலாது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மறுத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக ஞாயிறன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

“தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!”.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!
கர்நாடகா முதல்வர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 31 Jul 2026 07:54 AM IST

சென்னை, ஜூலை 31: காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், தங்களது மாநிலத்தில் போதிய நீர் இருப்பு இல்லை எனக் கூறித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்பதில் கர்நாடக அரசு மீண்டும் கடுமையான பிடிவாதம் காட்டி வருகிறது.

இதையும் படிக்க: நீட் தேர்வு.. நாடாளுமன்றத்தில் திமுக – அதிமுக எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்..

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்:

டெல்லியில் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது ஆலோசனைக் கூட்டம், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு முன்னதாக அளித்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், பற்றாக்குறை கால நீர்ப் பங்கீட்டு விதிகளின் கீழ் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தொடர்ச்சியாக வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் நீர் திறக்க வேண்டும் என்று ஆணையம் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது.

தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தல்:

இக்கூட்டத்தில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்ட தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள், குறுவைச் சாகுபடி மற்றும் தமிழகக் குடிநீர்த் தேவைகளைக் கருத்தில் கொண்டு உடனடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும் என உறுதியாக வலியுறுத்தினர். ஆனால், கர்நாடக அரசு அதிகாரிகள் தங்களால் நீர் திறக்க முடியாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தண்ணீர் திறக்க முடியாது:

ஆணையத்தின் உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கர்நாடக அரசின் நிலையைத் தெளிவுபடுத்தினார். “கர்நாடகாவில் உள்ள அணைகளில் தற்போதைக்குக் குடிநீர்த் தேவைக்கே போதுமான அளவு நீர் மட்டுமே உள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது. இந்தச் சிக்கலான சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம்.

மேலும், காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து நேரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் வரவுள்ளார். இரு மாநிலங்களின் ஒட்டுமொத்த நலன்களையும் பாதுகாக்கும் வகையில், மனப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமானத் தீர்வைக் காண முயல்வோம்” என்றார்.

இதையும் படிக்க : தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

கொதிப்பில் தமிழக விவசாயிகள்:

காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளைத் தொடர்ச்சியாக மதிக்காமல் தண்ணீர் தர மறுத்து வரும் கர்நாடக அரசின் இந்த அடாவடிப் போக்கிற்குத் தமிழக அரசியல் தலைவர்களும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக அரசு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி அவசர மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us