AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: அடினா அடி பொக்கு பொக்குனு அடி.. நாங்க நாலு பேரு பாடல் விமர்சனம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

Naanga Naalu Peru Song Criticisms: நடிகர் சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தயாராகிவந்த படம்தான் கருப்பு. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் அவர் நடனமாடியிருந்த நாங்க நாலு பேரு பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

Karuppu: அடினா அடி பொக்கு பொக்குனு அடி.. நாங்க நாலு பேரு பாடல் விமர்சனம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
ஆர்.ஜே.பாலாஜியின் கருப்பு படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Apr 2026 20:43 PM IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்தவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaj). இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். இதுவரை இவரின் இயக்கத்தில் 2 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 3வது வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் கருப்பு (Karuppu). இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா (Suriya) லீட் நடிகராக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan)நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தொடங்கியிருந்த நிலையில், 2025ம் ஆண்டு இறுதியில் நிறைவடைந்திருந்தது. அந்த விதத்தில் இப்படமானது கிடத்தத்ட்ட 2 ஆண்டுகளாக தயாராகிவந்தது என்றே கூறலாம். இந்நிலையில் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 3 பாடல்கள் வெளியாகியிருந்தது. அதில் “நாங்க நாலு பேரு” (Naanga Naalu Peru) என்ற பாடலை சிலம்பரசன் பாடி, ஆர்.ஜே.பாலாஜி நடனமாடியிருந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது அந்த விமர்சனங்கள் குறித்து ஆர்.ஜே.பாலாஜி மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: விக்ரமின் சியான் 63 படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்

நாங்க நாலு பேரு பாடல் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த ஆர்.ஜே.பாலாஜி:

சமீபத்தில் நேர்காணலில் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “நான் கருப்பு படத்தின் இரண்டவது பாடலாக ராத்து ராசன் படலைதான் வெளியிட நினைத்தேன். ஆனால் எனது டீம், நாங்க நாலு பேரு பாடலை ரிலீஸ் செய்யலாம் என சொன்னார்கள். அவர்களின் பேச்சை கேட்டு நானும் அண்ட் பாடலை ரிலீஸ் செய்தேன். அப்போது அடினா அடி பொக்கு பொக்கு-னு அடி. பொதுவாக அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களை திட்டுவார்கள். விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களை திட்டுவாங்க. ஆனால் சூர்யா சார் ரசிகர்கள் மட்டும் எங்களை திட்டுவாங்க. அடிவாங்குனது மத்த ரசிகர்களிடம் இருந்து இல்ல, சூர்யா ரசிகர்களிடமிருந்துதான். அதனால மனதளவில் சாய் அபயங்கர் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: தனுஷின் கர படத்திற்கு கிடைத்தது சென்சார்.. யாரெல்லாம் படத்தை பார்க்கலாம் தெரியுமா?

இந்த தவறு எங்கள் மீதுதான் உள்ளது. ஒருவருக்கு நல்ல பசி இருக்கும்போது, சுடுதண்ணியை கொடுத்தால் குடிப்பாரா? முகத்தில் ஊற்றிவிடுவார். ஒரு இட்லி கொடுத்திருக்கும். நாங்கள் ரசிகர்களுக்கு இட்லி கொடுக்காமல் சுடுதண்ணி கொடுத்துவிட்டோம். நான் இரண்டாவது பாடலாக ராத்து ராசன் பாடலை விட்டுருக்கணும், ரசிகர்களின் 5 மாத காத்திருப்பிற்கு ஒரு தீனியாக இருந்திருக்கும். அதில் சூர்யா சார் சிறப்பாக நடனமாடியிருப்பார். மேலும் விஷுவலும் நன்றாக இருக்கும். அதற்கு பிறகு நாங்க நாலு பேரு பாடலை ரிலீஸ் செய்திருக்கலாம் என நினைத்தேன்” என அதில் தெரிவித்திருந்தார்.

நாங்க நாலுபேரு பாடலின் விமர்சனங்கள் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசிய வீடியோ:

சூர்யாவின் கருப்பு திரைப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் படத்தின் விளம்பர பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2026ம் ஏப்ரல் இறுதியில் மதுரையில் நடைபெறவுள்ளதாம்.

Follow Us