Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OTT Movies: மர்ம கொலை.. சிக்கும் 7 பெண்கள்.. ஓடிடியில் இந்த படம் மிஸ் பண்ணாதீங்க!

Mystery Thriller Movies: 2021ல் வெளியான "7 பெண்களும் ஒரு கொலையும்" என்ற இத்தாலிய மர்மத் திரில்லர் படம், ஃபிரான்சுவாஸ் ஓசோனின் "8 Women" படத்தின் ரீமேக் ஆகும். கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஒரு குடும்பத்தில் நடக்கும் கொலைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது.

OTT Movies: மர்ம கொலை.. சிக்கும் 7 பெண்கள்.. ஓடிடியில் இந்த படம் மிஸ் பண்ணாதீங்க!
7 Women And A Murder படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Jun 2025 09:30 AM

ஓடிடி தளங்கள் (OTT Platforms) பலவிதமான கதைக்களங்கள் கொண்ட பல மொழி திரைப்படங்களையும் பார்ப்பதற்கு நல்ல வசதியான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் வெவ்வேறு ஜானர்களில் வெளியான படங்களையும் நாம் பார்த்து ரசிக்க முடிகிறது. அந்த வகையில் 7 Women and a Murder என 2021 ஆம் ஆண்டு வெளியான இத்தாலிய மர்மங்கள் நிறைந்த ஒரு படத்தைப் பற்றிப் பார்க்கலாம். இது ஃபிரான்சுவாஸ் ஓசோன் என்பவர் இயக்கிய தி ஹூம்ஸ் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 8 Women என்ற படத்தின் ரீமேக்காகும். அலெஸாண்ட்ரோ ஜெனோவேசியால் 7 Women and a Murder படத்தில் மார்கெரிட்டா,ஓர்னெல்லா வனோனி,மைக்கேலா ராமசோட்டி,சப்ரினா இம்பாசியேடோர்,லூயிசா ரானியேரி,டயானா டெல் புஃபாலோ,பெனெடெட்டா போர்கரோலி,மார்கோ ரோசெட்டி என பலரும் நடித்திருந்தனர். ஃபெடெரிகோ மாசிரோ ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ஆண்ட்ரியா ஃபாரி இசையமைத்திருந்தார்.

படத்தின் கதை

இந்த படத்தின் கதையானது ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வீடு திரும்புகிறார் ஒரு இளம்பெண். அந்த வீட்டில் வீட்டில் தந்தை, தாய், இளைய சகோதரி, பணிப்பெண், பாட்டி மற்றும் தாயின் சகோதரி ஆகியோர் வசித்து வருகின்றனர். இதனிடையே தனது தந்தைக்கு காலை உணவு வேண்டுமா என்று பார்க்க பணிப்பெண்ணை அப்பெண் அனுப்பப்படுகிறார். அங்கு அறையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் குடும்பத்தினர் அவரை கொலை செய்தது யார் என குழம்பி தவிக்கிறார்கள். இதுதொடர்பான சோதனையில் வீட்டின் தொலைபேசி இணைப்பு, கார் என்ஜின் சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்படுகிறது.

வீட்டில் 6 பெண்கள் இருக்க, 7வதாக ஒரு பெண் வருகிறாள். அவள் அந்த வீட்டில் இறந்து கிடந்த நபரின் முன்னாள் மனைவியின் குழந்தையாவார். தனது தந்தை இறந்து விட்டதாக தனக்கு மர்மமான தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறுகிறாள். இதனால் உண்மையில் இந்த கொலையை யார் செய்தது?, அப்பெண்ணுக்கு தொலைபேசியில் தகவல் சொன்னது யார்? என்பதை வெறும் 83 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படமானது தெரிவிக்கிறது.

7 Women and a Murder சிறப்புகள்

இந்த படத்தை நாம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம். இப்படம் இத்தாலி நாட்டில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸால் தியேட்டரில் வெளியிட்டப்பட்டது. விமர்சகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்ற இப்படம் நல்ல வசூலையும் அள்ளியது. வாய்ப்பிருப்பவர்கள் இந்த படம் பார்த்து மகிழுங்கள்.

விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்...