Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

OTT Movies: நடுவானில் விமான விபத்து.. சிக்கும் 155 பயணிகள்.. இந்த படம் தெரியுமா?

Best OTT Movies: Sully: Miracle on the Hudson படமானது 2009-ல் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பறவை மோதியதால் இயந்திரங்கள் செயலிழந்த விமானத்தை, கேப்டன் "சல்லி" சுல்லன்பெர்கர் ஹட்சன் நதியில் பாதுகாப்பாக இறக்கி பயணிகளின் உயிரைக் காத்தார். அது எப்படி என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்ய நிகழ்வாக அமைந்தது.

OTT Movies: நடுவானில் விமான விபத்து.. சிக்கும் 155 பயணிகள்.. இந்த படம் தெரியுமா?
Sully படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 17 Jun 2025 09:00 AM

சில படங்களைப் பார்க்கும்போது அது நம் வாழ்க்கையில் அல்லது நம்மைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளாக இருக்கும் பட்சத்தில் நம்மை பாதிக்க அதிகம் வாய்ப்புள்ளது. சில உண்மை நிகழ்வுகள், மனதிற்கு நெருக்கமான காட்சிகள் என திரைப்படங்கள் நம் உணர்வோடு கலந்துள்ளவை என நிரூபிக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரு கணம் சோக கடலில் ஆழ்த்தியது. 270 பேருக்கும் மேல் பயணிகள், ஊழியர்களும் உயிரிழந்த இந்த விபத்தில் என்ன நடந்தது, எப்படி விபத்து ஏற்பட்டிருக்கும் என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அதேபோன்று ஒரு சம்பவம் அடங்கிய படம் பற்றிப் பார்க்கலாம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Sully: Miracle on the Hudson படம் தான் அது. டாட் கோமர்னிக்கி எழுதிய கதையை படமாக கிளின்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood) இயக்கியிருந்தார். இப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியான செஸ்லி “சல்லி” சுல்லன்பெர்கர் மற்றும் ஜெஃப்ரி ஜாஸ்லோ ஆகியோரின் சுயசரிதை Highest Duty-யை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு யுஎஸ் ஏர்வேஸ் விமானம் 1549 நடுவானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹட்சன் நதியில் அவசரமாக தரையிறக்கியதையும், அதில் பயணித்த 155 பயணிகள் பத்திரமாக காப்பாற்றப்பட்டதையும் குறிப்பிட்டு இந்த படம் வெளியானது.

படத்தின் கதை


2009 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி லாகார்டியா விமான நிலையத்திலிருந்து யுஎஸ் ஏர்வேஸ் விமானம் 1549 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை கேப்டன் செஸ்லி “சல்லி” சுல்லன்பெர்கர் மற்றும் முதல் அதிகாரி ஜெஃப் ஸ்கைல்ஸ் ஆகியோர் பைலட்களாக பணியாற்றினர். விமானம் புறப்பட்ட நிலையில் அதன் மீது பறவைக் கூட்டம் மோதியது. இதில் இரண்டு என்ஜின்களும் சேதமான நிலையில் அதில் பயணித்த 155 பயணிகளையும் இருவரும் சேர்ந்து எப்படி காப்பாற்றினர் என்பதே இப்படத்தின் கதையாகும். நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம்மை பரபரப்பின் உச்சத்துக்கே அழைத்து செல்லும் அளவுக்கு அந்த சம்பவம் உலக அளவில் பேசுபொருளாக மாறியது.

இப்படத்தில் “சல்லி” சுல்லன்பெர்கர் கேரக்டரில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார். அதேபோல் ஜெஃப் ஸ்கைல்ஸாக ஆரோன் எக்கார்ட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

படத்தின் சிறப்புகள்

சல்லி படம் 2016ஆம் ஆண்டு 43வது டெல்லூரைடு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. ஆனால் இந்த படம் பார்ப்பவர்கள் விமான பயணத்தில் எதிர்மறையான கருத்துகளை பெறுவார்கள் என்பதால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற விமானங்கள் தங்கள் நிறுவனத்தின் பொழுதுபோக்கு விஷயங்களில் இப்படத்தை சேர்க்கவே இல்லை. ஆனால் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் இப்படத்தை ஏற்றுக்கொண்டது. உலகளவில் இப்படம் வசூலை வாரிக் குவித்தது. இந்த Sully: Miracle on the Hudson படமானது Hollywood Film Awards,Japan Academy Film Prize உள்ளிட்ட பல்வேறு விழாவில் விருதுகளையும் அள்ளியது. இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி சேனலில் காணக் கிடைக்கிறது.

தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது...
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது......
தப்ப முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.. கடலூரில் பரபரப்பு
தப்ப முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.. கடலூரில் பரபரப்பு...
காலணிகள் கடிப்பதிலிருந்து தப்பிக்க 6 வழிகள் என்னென்ன?
காலணிகள் கடிப்பதிலிருந்து தப்பிக்க 6 வழிகள் என்னென்ன?...
ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் சௌமியா அன்புமணி சிறப்பு வழிபாடு
ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் சௌமியா அன்புமணி சிறப்பு வழிபாடு...
மேகாலயாவில் கண்டறிய வேண்டிய 10 அழகான சுற்றுலாத் தலங்கள்..
மேகாலயாவில் கண்டறிய வேண்டிய 10 அழகான சுற்றுலாத் தலங்கள்.....
ஆண்டவன் நல்ல படங்களை சோதிப்பான், ஆனால்... கார்த்திக் சுப்பராஜ்
ஆண்டவன் நல்ல படங்களை சோதிப்பான், ஆனால்... கார்த்திக் சுப்பராஜ்...
சூப்பர் ஃபாஸ்டாக மாறிய யுபிஐ - என்ன என்ன மாற்றங்கள்?
சூப்பர் ஃபாஸ்டாக மாறிய யுபிஐ - என்ன என்ன மாற்றங்கள்?...
இஸ்ரேல் - ஈரான் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு...
அலட்சியத்தால் விரலை இழந்த நபர்.. சாதாரணமாக விடப்படும் உடல்நலம்..!
அலட்சியத்தால் விரலை இழந்த நபர்.. சாதாரணமாக விடப்படும் உடல்நலம்..!...
கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இதை மறக்காம செய்யுங்க!
கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இதை மறக்காம செய்யுங்க!...
விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு - நடிகர் ரஜினிகாந்த்
விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு - நடிகர் ரஜினிகாந்த்...