Dhanush : வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில்.. தனுஷின் படங்களை இயக்கும் இயக்குநர்கள் யார் தெரியுமா?
Vels Films International production Dhanush Movie Directors : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் தனுஷ். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட இயக்குநர்கள் பட்டியலில், தனுஷின் படங்களை இயக்கும் இயக்குநர்கள் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

நடிகர் தனுஷ் (Dhanush) தென்னிந்திய சினிமாவையும் கடந்து, தற்போது பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த படம்தான் குபேரா (Kuberaa). இந்த படத்தை இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியிருந்தார். இவர் பிரபல தெலுங்கு இயக்குநர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷுடன் நடிகர்கள், நாகார்ஜுனா (Nagarjuna), ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் ஷார்ப் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. தற்போது இப்படமானது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இந்தியில், தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishq Mein) என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கிவருகிறார். இவர்தான் தனுஷின் முதல் இந்தி படமான ரஞ்சனா அதாவது அம்பிகாபதி படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தேரே இஷ்க் மெய்ன் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் , சமீபத்தில் தமிழ் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் (Vels Films International) நிறுவனமானது, தனது தயாரிப்பில் 2025 முதல் 2027 ஆண்டு வரை உருவாகவிருக்கும் படங்களின் இயக்குநர்கள் (Directors) பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் தனுஷின் நடிப்பில் 3 படங்கள் உருவாகவுள்ளது. அந்த படத்தை இயக்கும் இயக்குநர்கள் யார் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.




வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷின் படங்களை இயக்கும் இயக்குநர்கள் :
நடிகர் தனுஷ் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகிவருகிறார். அவர் தனது கைவசத்தில் கிட்டத்தட்ட 8 படங்கள் வீதம் வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழி படங்களும் அதில் அடங்கும். இந்நிலையில், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜின் கூட்டணி படத்தை பற்றிய அறிவிப்புகள் ஏற்கனவே படக்குழு வெளியிட்டிருந்தது.
தனுஷின் 56வது திரைப்படம் என்று அறிவிக்கப்பட்ட இப்படமானது, வரலாற்று பின்னணி கதைக்களம் கொண்ட படமாக உருவாக உள்ளது. இதை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அசோக் செல்வன் மற்றும் சரத்குமாரை வைத்து போர் தொழில் படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் விக்னேஷ் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இயக்கத்திலும் தனுஷ் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம். இது குறித்து தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூட நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்திலும் தனுஷ், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் படத்தில் இணையவுள்ளாராம். இந்த படம் வடசென்னை 2 படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அது சிலம்பரசன் படமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனுஷ் வடசென்னை 2 படமானது 2026ம் ஆண்டு வரும் என தனுஷும், குபேரா பட நிகழ்ச்சியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.