AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Legend Saravanan : தீபாவளி வெளியீட்டை நோக்கி இறுதி கட்ட படப்பிடிப்பு… லெஜண்ட் சரவணன் கொடுத்த அப்டேட்

Legend Saravana New Movie Update : தமிழில் பிரபலமான தொழிலதிபர்களை ஒருவர்தான் லெஜண்ட் சரவணா. இவர் தனது தொழில்களையும் தொடர்ந்து சினிமாவிலும் கால்பதித்துள்ளார். இவரின் நடிப்பில் ஏற்கனவே ஒரு படம் வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்த படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இப்படமானது வரும் 2025, தீபாவளிக்கு வெளியாகும் என அப்டேட் கொடுத்துள்ளார்.

Legend Saravanan : தீபாவளி வெளியீட்டை நோக்கி இறுதி கட்ட படப்பிடிப்பு… லெஜண்ட் சரவணன் கொடுத்த அப்டேட்
லெஜெண்ட் சரவணா புதிய திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Jun 2025 21:45 PM IST

தமிழகத்தில் தொழிலதிபராக இருந்து சினிமாவில் நடிகராக நுழைந்தவர் லெஜண்ட் சரவணன் (Legend Saravanan). இவரின் நடிப்பில் தமிழில் ஏற்கனவே ஒரு திரைபடம் வெளியாகியிருக்கிறது. இவர் தமிழகத்தில் பெரிய தொழிலதிபர் (Big businessman in Tamil Nadu) என்ற நிலையில், லெஜண்ட் சரவணா என்ற தனது பெயரிலே பல பிரம்மாண்ட வணிக வளாகம் மற்றும் தங்கநகை கடைகளையும் வைத்துள்ளார். தொழில்களை தொடர்ந்து, சினிமாவில் நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ‘தி லெஜெண்ட்’ ((The Legend) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஜே.டி.ஜெரி (J.D. Jerry) இயக்கியிருந்தார். இந்த படத்தில் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் மாறுபட்ட ஆக்ஷ்ன் நாயகனாக நடித்திருந்தார். அதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா (Urvashi Rautela) நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, மேலும் ஒரு புதிய படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் (Durai Senthilkumar) இயக்கிவருகிறார். இவர் தமிழில் ஏற்கனவே கொடி, எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணன், புதிய படத்தின் படப்பிடிப்பானது இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், வரும் 2025 தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இப்படமானது சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகிவருவதாகவும் விரைவில் இப்படத்தின் டைட்டில் தொடர்பான அப்டேட்டும் வெளியாகும் என கூறியுள்ளார்.

லெஜண்ட் சரவணா புதிய பட அப்டேட் பதிவு :

லெஜண்ட் சரவணா புதிய திரைப்படம் :

தொழிலதிபர் லெஜண்ட் சரவணா நடித்துவரும் புதிய படமானது முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகிவருகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தனுஷின் கொடி, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் மற்றும் காக்கிசட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கிவருகிறார். லெஜண்ட் சரவணா நடிக்கும் இந்த படமானது சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் மாஸ் கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம். இப்படத்தில் முக்கிய நடிகர்களாக, ஷாம், பாயல் ராஜ்புட் மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமியா நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்துவரும் நிலையில் வரும் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என, நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணா பேசியுள்ளார். இப்படத்தை ஷூட்டிங்கை விரைவில் முடிப்பதற்கு பேசிவருவதாகவும் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தை லெஜண்ட் சரவணனின் தயாரிப்பு நிறுவனமான தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இப்படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிவருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us