15 வருடங்களை நிறைவு செய்த காதல் சொல்ல வந்தேன் படம்… எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
15 Years Of Kaadhal Solla Vanthen: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்து வெற்றியடைந்த படங்களைப் போலவே சின்ன சின்ன நடிகர்களின் நடிப்பில் வெளியான நல்லப் படங்களை ரசிகர்கள் வரவேற்க தவறியதில்லை. அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் காதல் சொல்ல வந்தேன்.

இயக்குநர் பூபதி பாண்டியன் (Director Boopathy Pandian) எழுதி இயக்கியுள்ள படம் காதல் சொல்ல வந்தேன். கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி 2010-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் பாலாஜி பாலகிருஷ்ணன் நாயகனாக நடித்து இருந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர். மேலும் நடிகை மேக்னா ராஜ் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கார்த்திக் சபேஷ், ஆர்.சுந்தர்ராஜன், அஸ்வின், தம்பி ராமையா, செவ்வலை ராசு, பாய்ஸ் ராஜன், உஷா எலிசபெத் சூரஜ், ஹீரா, பொள்ளாச்சி செல்வம் தங்கதுரை, ரவி, தஞ்சை ரகுபதி, தாஜ்கான், மாஸ்டர் சூர்யா இவர்களுடன் நடிகர் ஆர்யா டாக்டராக கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை எஸ்3 ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ். ஜெயக்குமார் மற்றும் மீனா ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகரக்ளிடையே வரவேற்பைப் பெற்றது போல படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




காதல் சொல்ல வந்தேன் படத்தின் கதை என்ன?
வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கும் ஹீரோ பிரபு கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரி சென்ற முதல் நாளே சீனியர் பெண் சந்தியாவை அவருக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அவர் மீது காதலும் கொள்கிறார். பின்பு அவரைத் தொடர்ந்து பின் தொடர்கிறார். இந்த நிலையில் பிரவின் சீனியர் சந்தியாவின் க்ளாஸ்மெட் அரவிந்த் என்பவரும் சந்தியாவை காதலித்து வருகிறார். அவர் பிரபு குறித்து அறிந்துகொண்டு பிரபு மூலம் சந்தியாவிடம் தன் காதலை சொல்ல முயற்சி செய்கிறார்.
ஆனால் பிரபு அரவிந்திற்கு உதவுவதுபோல தனது காதலை மிகவும் தீவிரமாக வளர்த்து வருகிறார். முதலில் பிரபுவை ஜூனியராக பார்த்த சந்தியா பிறகு அவருடன் நெறுங்கி பழகுகிறார். அவரின் குடும்பத்தினருடனும் இணைந்து பழகுகிறார். பின்பு பிரவிற்கு தன்மீது இருக்கும் காதலை உணர்ந்த சந்தியா அதனை ஏற்றுக்கொண்டாரா? அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… தள்ளிப்போகிறது விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் ரிலீஸ்!
நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
View this post on Instagram
Also Read… ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாப்பாத்திரத்தை கொடுத்த கார்த்திக் சுப்பராஜிற்கு நன்றி – பூஜா ஹெக்டே!