Cinema Rewind : ஆர்யா எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்.. நடிகர் விஷால் சொன்ன விஷயம்!
Vishal About Arya Fitness : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருகிறார். இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் நடிகர் ஆர்யா பற்றியும் அவரின், உத்வேகம் பற்றியும் பேசியிருக்கிறார். அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால் (Vishal) . இவர் சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக மத கஜ ராஜா (Madha Gaja Raja) திரைப்படம் வெளியானது. இந்த படமானது சுமார் 12 வருடங்களுக்குப் பின் இந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன் இயக்குநர் ஹரியின் (Hari) இயக்கத்தில் ரத்னம் (Rathnam) என்ற படத்திலும் நடித்திருந்தார், தென் மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். மேலும் இவருக்குக் கதாநாயகனாக முதலில் அமைந்த படம் செல்லமே (Chellame). கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி விஷால் பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில் நடிகர் ஆர்யாவின் (Arya) பிட்னஸ் (fitness) மற்றும் அவரின் உத்வேகம் (Inspiration) குறித்துப் பேசியிருந்தார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




ஆர்யா தனது இன்ஸ்பிரேஷன் என விஷால் பேச்சு :
முன்னதாக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் விஷால் ஆர்யா பற்றியும் அவரின் பிட்னஸ் பற்றியில் ஓபனாக பேசியிருந்தார். அதில் அவர், “நான் பிட்னஸில் வெறித்தனமாக இருந்தவன், ஆனால் ஆர்யா பிட்னஸில் வெறியாக வாழ்ந்து வருகிறார். அவர் சைக்கிளிங் மற்றும் பீச்சில் வெறித்தனமாக ஓடுவார். அவரோடு யாராலும் ஈடுகொடுக்க முடியாது, அவர் கூப்பிட்டால் கூட நான் போகமாட்டேன். உடல் கட்டுப்பாட்டில் அவ்வளவு வெறியாக இருப்பார் ஆர்யா. இப்போது ஒரு அரசியல் கட்சியில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றால் ஆர்யாவைக் கூப்பிடலாம், அவரின் சைக்கிளில் அந்த கட்சி கொடியைக் கட்டிவிட்டால் பல கிலோமீட்டருக்குப் பிரச்சாரம் செய்ததுபோல இருக்கும். அவர் சுமாராக 200 கிலோ மீட்டருக்கும் மேல் சைக்கிளிங் செய்வார். அவர் எனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷன் ஆனா மனிதர்.
மாராத்தான் ஓடிய ஆர்யாவின் வீடியோ
View this post on Instagram
எனக்கு பிட்னஸை பொறுத்தவரைக்கும் இருவர் எனக்கு உத்வேகம் கொடுப்பவர்கள். ஒன்று ஏன் அப்பா மற்றும் ஆர்யாதான் என நடிகர் விஷால் ஓபனாக பேசியிருந்தார். ஆர்யாவும், விஷாலும் சினிமாவில் சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போது இந்த நேர்காணல் தொடர்பான வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.