AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹேப்பி ராஜ் முதல் சாத்தான் வரை… நாளை மார்ச் 27-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

This week theatre release movies list in tamil cinema: தமிழ் சினிமாவில் நாளை 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் சின்னது முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த லிஸ்டை தற்போது பார்க்கலாம்

ஹேப்பி ராஜ் முதல் சாத்தான் வரை… நாளை மார்ச் 27-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Mar 2026 19:27 PM IST

ஹேப்பி ராஜ் படம்: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது இசையமைப்பாளர் மற்றும் நாயகனாகவும் வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் தொடர்ந்து இசையமைப்பாளராக பிசியாக வலம் வந்தாலும் வருத்திற்கு ஒருமுறையாவது நாயகனாக படங்களில் நடித்ஹ்டு வருகிறார். அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஹேப்பி ராஜ். இந்தப் படத்தினை இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசிஅயமைப்பாளராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீ ஃபாரெவர் படம்: இயக்குநர் அசோக் குமார் கலைவாணி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நீ ஃபாரெவர். இந்தப் படத்தில் நடிகர்கள் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், ஸ்ரீஜா ரவி
செல்லா, டாக்டர் வித்யா, வி.ஜே.பிரது, நோபல் கே ஜேம்ஸ், சினேகா சக்தி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நாளை 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… என்றென்றும் ரசிகர்கள் கொண்டாடும் தோழா படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது – இயக்குநரின் நெகிழ்ச்சிப் பதிவு

சாத்தான் தி டார்க் படம்: இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சாத்தான் தி டார்க் படம். இந்தப் படத்தில் நடிகர்கள் எஃப்.ஜே, ஐரா, சாந்தினி தமிழரசன், மோனா பெத்ரே என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… நாளை திரையரங்குகளில் வெளியாகும் பிரதிசாயா படத்தின் டீசர் இதோ

Follow Us