ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி – வைரலாகும் போட்டோ
Actor Pradeep Antony blessed with a baby boy : தமிழ் சினிமாவில் அருவி, வாழ் மற்றும் டாடா ஆகியப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். இவர் படங்களில் நடித்து பிரபலம் ஆனதைவிட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

பிரதீப் ஆண்டனி
தமிழ் சினிமாவில் நடித்து நடிகர்கள் பிரபலமாவது ஒரு பக்கம் இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆவது மற்றொரு பக்கம் உள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொளவதற்கு முன்பே கெஸ்டாக வந்து பிரபலம் ஆனார் பிரதீப் ஆண்டனி. அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கவினின் நண்பராக உள்ளே வந்தார் பிரதீப் ஆண்டனி. அப்போது கவின் கேமில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரை பளார் என்று கண்ணத்தில் ஒரு அறை விட்டார். அதன்பிறகு தமிழக மக்களிடையே பிரபலம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார் பிரதீப் ஆண்டனி. மேலும் தமிழ் சினிமாவில் வெளியான அருவி என்ற படத்தில் பத்திரிக்கையாளராக பிரதீப் ஆண்டனி நடித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து வாழ் மற்றும் டாடா ஆகியப் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த சீசனில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார். ஆனால் மற்ற போட்டியாளர்களின் சூழ்ச்சியால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்களிடையே அவருக்கு வரவேற்பு அதிகரித்தது.
ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி:
இந்த நிலையில் பிரதீப் ஆண்டனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் தோழி பூஜாவை கரம்பிடித்தார். இந்த நிலையில் இவர்கள் இருவக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் பிரதீப் ஆண்டனி புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read… Sai Abhyankkar: டிராகன் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சாய் அபயங்கர்.. ஹீரோவா? இசையமைப்பாளரா?
நடிகர் பிரதீப் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s a boy 😎🙏
Thamizh Puthandu Nalvaazhthukkal 🤗 pic.twitter.com/1XBvbZqVxt
— Pradeep Antony (@TheDhaadiBoy) April 14, 2026
Also Read… குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே… 35 ஆண்டுகளைக் கடந்தது என் ராசாவின் மனசிலே படம்