விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!

Vijay Perambur Nomination: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்ப மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களில் முரண்பாடு காரணமாக அந்த மனுவை ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு... நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!

விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி

Updated On: 

27 Apr 2026 12:18 PM

 IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு  சட்டமன்ற தொகுதி மற்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இதில், சொத்து விவகாரத்தை தவெக தலைவர் விஜய் மறைத்ததாக கூறப்படுகிறது. அதாவது, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் ரூ.100 கோடி வரை சொத்துக்கள் மறைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொள்ள கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

விஜய் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு

இது தொடர்பாக அந்த தொகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவருக்கு ரூ.12.60 கோடி வழங்கி உள்ளதாக விஜய் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. இது மட்டும் இன்றி தனியார் கல்வி அறக்கட்டளைக்கு அவர் ரூ.20 கோடி வரை பணம் வழங்கியது தொடர்பாக வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை. இது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வது போன்றது.

மேலும் படிக்க: “தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!

விஜய் வேட்பு மனு மறு ஆய்வு செய்யக் கோரி மனு

எனவே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேட்பு மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று திங்கள்கிழமை தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய்யின் வேட்பு மனுவில் உள்ள முரண்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மனு தாரர் தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டது.

தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இதைத் தொடர்ந்து, மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, தற்போதும் இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தற்போதைய நிலைக்கு தேவையில்லை. எனவே, இந்த மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?