கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சிஇடி தேர்வில் மாணவிகளுக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான அனுபவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் தேர்வு எழுத வந்த சில மாணவிகளிடம், மூக்குத்தியை அகற்றவும் அல்லது டேப்பால் மூடவும் அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.