AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டசபை தேர்தல் 2026: மங்கிப்போன சுயேச்சைகளின் ஆதிக்கம்…. யாரும் வெற்றி இல்லை!

Trend of Independent Candidates: தமிழகத்தில் 1967 முதல் 2006 வரை பல்வேறு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று சட்டசபையை அலங்கரித்தனர். ஆனால், 2011-க்குப் பிறகு பொதுத் தேர்தல்களில் சுயேச்சைகளின் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் பெற்ற வெற்றி மட்டுமே கடந்த பத்தாண்டுகளில் ஒரு பெரிய விதிவிலக்காக அமைந்தது.

தமிழக சட்டசபை தேர்தல் 2026: மங்கிப்போன சுயேச்சைகளின் ஆதிக்கம்…. யாரும் வெற்றி இல்லை!
சுயேச்சை வேட்பாளர்கள்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 May 2026 17:53 PM IST

தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு காலத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தனர். பெரிய கட்சிகளின் அலை வீசினாலும், தனிநபராக நின்று மக்களின் நம்பிக்கையைப் பெற்று சட்டசபைக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை வியக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக, 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 சுயேச்சைகளும், 1971-ல் 8 பேரும் வெற்றி பெற்றனர். அதன் பிறகு 1977-ல் ஒருவர் மட்டுமே வென்றாலும், 1980-ல் மீண்டும் 8 பேர் வெற்றி பெற்று அசத்தினர். 1984 மற்றும் 1989 தேர்தல்களில் முறையே 4 மற்றும் 5 சுயேச்சைகள் சட்டப்பேரவைக்குத் தேர்வாகி, ஜனநாயகத்தில் தனிநபர் செல்வாக்கை நிலைநாட்டினர்.

சமீபத்திய சரிவும் ஆர்.கே. நகர் விதிவிலக்கும்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், கட்சி அரசியலின் தீவிரமும் அதிகரித்த நிலையில், 1991 முதல் சுயேச்சைகளின் வெற்றி வாய்ப்பு குறையத் தொடங்கியது. 1991 மற்றும் 1996-ல் தலா ஒருவர் மட்டுமே வென்ற நிலையில், 2001-ல் 3 பேரும், 2006-ல் ஒருவரும் வெற்றி பெற்றனர். இருப்பினும், 2011 மற்றும் 2016 பொதுத் தேர்தல்களில் ஒரு சுயேச்சை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

Also Read: அதிமுக கோட்டையைத் தகர்த்த ‘வெற்றி’க் கழகம்: ராயபுரத்தில் ஜெயக்குமார் படுதோல்வி – டெபாசிட் காலி!

தற்போதைய நிலை மற்றும் தொடரும் வறட்சி

கடந்த சில தேர்தல்களாக தமிழக மக்கள் பெரிய கட்சிகள் அல்லது கூட்டணிகளுக்கே வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல, சமீபத்தில் நடந்த தேர்தல்களிலும் சுயேச்சைகளால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. 1960-களில் தொடங்கி 2000-களின் முற்பகுதி வரை சட்டசபையை அலங்கரித்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, தற்போது முற்றிலுமாக பூஜ்ஜியமாக மாறியுள்ளது தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

Follow Us