ரூ.600 கோடி சொத்துகளை மறைத்த சுந்தர் சி?.. தேர்தல் களத்தில் கிளம்பிய அதிரடிப் புயல்!
Tamilnadu Assembly Election: ஒட்டுமொத்தமாக சுமார் 604 கோடி ரூபாய் முதல் 700 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை இந்தத் தம்பதியினர் மறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சேட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமம் மற்றும் விளம்பர வருமானங்கள் ஆகியவையும் அடங்கும். என கூறியுள்ளார்.
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி, தனது வேட்புமனுவில் சுமார் 604 கோடி ரூபாய் மதிப்பிலான வருமானத்தை மறைத்துள்ளதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி தாக்கல் செய்த (Form 26) பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்தபோது, அவரும் அவரது மனைவி குஷ்புவும் இணைந்து நடத்தி வரும் நிறுவனங்களின் வருமான விவரங்கள் முறையாகக் காட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் தலைவர்கள்.. இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்வு..
நிறுவனங்கள் மற்றும் வருவாய் விவரங்கள்:
சுந்தர் சி மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் இயக்குநர்களாக இருந்து அவனி சினிமாக்ஸ் பிரைவேட் லிமிடெட், அவனி மூவிஸ், அவனி டெலிமீடியா ஆகிய மூன்று நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களின் வருவாய் குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் முன்வைத்த புள்ளிவிவரங்கள். அதாவது, இந்த நிறுவனமானது, ‘அரண்மனை’ படத்தின் பாகங்கள் மூலம் மட்டும் சுமார் 194 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. (அரண்மனை 4 – ₹100 கோடி, அரண்மனை 2 – ₹70 கோடி, அரண்மனை 3 – ₹24 கோடி).
இவை தவிர அவர்கள் தயாரித்த இதர 18 திரைப்படங்களின் மூலம் குறைந்தபட்சம் 360 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. அவர்கள் தயாரித்த 10 சீரியல்கள் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
முக்கிய குற்றச்சாட்டுகள்:
ஒட்டுமொத்தமாக சுமார் 604 கோடி ரூபாய் முதல் 700 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை இந்தத் தம்பதியினர் மறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சேட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமம் மற்றும் விளம்பர வருமானங்கள் ஆகியவையும் அடங்கும். இந்த வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய சுமார் 180 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரையிலான வருமான வரியை முறையாகச் செலுத்தாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
வேட்புமனு முறைகேடு:
தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்தத் தகவல்களை மறைத்திருப்பது சட்டப்படி குற்றம் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் தங்களை நேர்மையானவர்களாகக் காட்டிக்கொள்ளும் இவர்கள், இவ்வளவு பெரிய தொகையை மறைத்தது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.