AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அரசியலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் பேபி”.. முதல்வர் ஸ்டாலின் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரேமலதா..

Tamilnadu Assembly Election: இந்த கூட்டத்திற்கு முன்பு கிடைத்த நேரத்தில் கமலஹாசனுடன் தான் உரையாடியதைக் குறிப்பிட்ட பிரேமலதா, சினிமாவுக்கும் அரசியலுக்குமான வித்தியாசத்தை விளக்கினார். "சினிமா என்பது ஒரு தொழில், ஆனால் அரசியல் என்பது மக்கள் சேவை. எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கை காட்டுவது அரசியல் கிடையாது" என்று அவர் கூறினார்.

“அரசியலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் பேபி”.. முதல்வர் ஸ்டாலின் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரேமலதா..
கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்,
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Apr 2026 06:46 AM IST

Tamilnadu Polls 2026: சேலத்தில் நேற்றைய தினம் (ஏப்.15) பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக பிரம்மாண்ட பேரணி சென்றனர். சுமார் 10,000 மகளிர் இந்த பேரணியில் அவர்களுடன் பங்கேற்றனர். அண்ணா பூங்கா கலைஞர் சிலை முதல் வழிநெடுக அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் வழியாக கோட்டை மைதான வரை ரோடு ஷோ நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அங்கு நடந்த பிரம்மாண்ட பிரச்சாரக்கூட்டத்தில் மூன்று பேருமே உரையாற்றினார்கள். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உள்ள நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது பாணியில் அதிரடியான விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!

நீங்க இன்னும் ஒரு லிட்டில் பாய்:

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய பிரேமலதா, அரசியலில் அனுபவம் மிக முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டினார். “75 வருஷ பாரம்பரியம் கொண்ட கட்சிகள் இருக்கும் இடத்தில், நீங்கள் இப்போதுதான் லாலிபாப் சாப்பிடும் ஒரு ‘ஃபர்ஸ்ட் பேபி’. அரசியலைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு ஹீரோ அல்ல, ஒரு ‘லிட்டில் பாய்’ (Little Boy) தான்” என விமர்சித்தார். முதலில் தேர்தல் களத்தில் இறங்கி உங்கள் வாக்கு வங்கியை நிரூபியுங்கள். அதன் பிறகுதான் தமிழகத்தில் இரண்டு பேருக்குத்தான் போட்டி என்ற வசனத்தைப் பேச வேண்டும், இல்லையெனில் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனச் சவால் விடுத்தார்.

சினிமா வேறு; அரசியல் வேறு:

இந்த கூட்டத்திற்கு முன்பு கிடைத்த நேரத்தில் கமலஹாசனுடன் தான் உரையாடியதைக் குறிப்பிட்ட பிரேமலதா, சினிமாவுக்கும் அரசியலுக்குமான வித்தியாசத்தை விளக்கினார். “சினிமா என்பது ஒரு தொழில், ஆனால் அரசியல் என்பது மக்கள் சேவை. எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கை காட்டுவது அரசியல் கிடையாது” என்று அவர் கூறினார். களத்தில் இறங்கி மக்களுக்காகப் போராடுபவர்களே அரசியலில் வென்றிருக்கிறார்கள். மக்களுடன் மக்களாக இருப்பதே ஒரு தலைமைக்கான மாண்பு என அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டு:

இன்று தான் அண்ணணுடன் முதல் முறையாக வாக்கிங் போனேன். முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு தூரம் ஆக்டிவ் அரசியலில் ஈடுபடுகிறார் என்றால், அதற்கு காரணம் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி தான் காரணம் என்று கூறினார். நான் எவ்வளவோ கூட்டத்தை பார்த்துள்ளேன். ஆனால் அண்ணன் கூட இதுதான் முதல் முறை. என் அண்ணன் ஸ்டாலின் தான் பெண் இனத்தின் பாதுகாவலர். அவர் மக்களுடன் நெருங்கிப் பழகுவதை மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். அண்ணன் ஸ்டாலின் தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்பதுடன், காலை நேரங்களில் மக்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார், மக்களுடன் அமர்ந்து காபி குடிக்கிறார். இந்த இயல்பான அணுகுமுறையைத்தான் இப்போது மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர் என்றார்.

மேலும் படிக்க: சென்னையில் 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் விஜய்.. முதல் முறையாக செய்த மாற்றம்..

கூட்டணி வெற்றி உறுதி:

கடமை கண்ணியம், கட்டுப்பாடு என்பதாகவே தமிழ்நாடு உள்ளது. தங்களது மதச்சார்பற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும், “மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

Follow Us