Tamil Nadu Election 2026 Highlights: திமுக வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
Tamil Nadu Assembly Election 2026 Highlights : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும், ஆதரவாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய், எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்
தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதத்துடன் இது முடிவடைகிறது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அடுத்த ஆட்சியை முடிவு செய்யவுள்ள தேர்தல் நடக்கவுள்ளது. வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெற இருப்பதை அடுத்து, அரசியல் களம் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. இது போக சசிகலா, ராமதாஸ் தரப்பும் இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக கட்சிக்கு ஆதரவாக தேசிய தலைவர்கள், சில மாநில முதல்வர்களுமே பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப்பகுதியில் தேர்தல் பிரசாரம் தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.
LIVE NEWS & UPDATES
-
“அதிமுக ஆட்சிக்கு வந்தால்..” – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
– திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணிய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை திமுக ரத்து செய்து விட்டது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தலைவாசல் கால்நடைப் பூங்கா மீண்டும் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தந்தது அதிமுக என்று பேசினார்.
-
திமுக வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
திருவள்ளூரில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், திமுகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டார்கள். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டியுள்ளது. சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. உண்மையாக உழைத்தால் ஊரே நம்மை ஏற்றி வைத்து கொண்டாடும் என்றார்.
-
அதிமுக ஆட்சியில் இரட்டை இலக்கில் பொருளாதார வளர்ச்சி
திருச்சியில் தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி இருக்கும்போதே பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்திற்கு வந்துவிட்டது. திமுக ஆட்சியில் விவசாய வளர்ச்சி 3 சதவீதம் தான் ஆனால் அதிமுக ஆட்சியில் 5.5 சதவீதம் இருந்தது என்று பேசினார்.
-
டெல்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு இங்கு சிக்னல் கிடைக்காது – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவள்ளூரில் திமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டெல்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு இங்கு சிக்னல் கிடைக்காது. கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு No Entry தான் என்று பேசினார்.
-
வண்ணம் தீட்டி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கீர்த்திகா தங்கபாண்டி கைவினைக் கலைஞர்களுடன் இணைந்து சிலைகளுக்கு வண்ணம் தீட்டி வாக்கு சேகரித்தார்.
-
குடிசைவாசிகள் இல்லாத தொகுதி – சேகர் பாபு வாக்குறுதி
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சேகர் பாபு, மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் குடிசையில் வசிப்பவர்கள் இல்லாத தொகுதியாக துறைமுகம் மாற்றப்படும் என மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
-
தேரை இழுத்த இசக்கி சுப்பையா
பாபநாசம் உடனுறை பாபநாசநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கலந்துகொண்டு, திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்
-
அமைச்சர் ராஜ கண்ணப்பன் வாக்குறுதி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அத்தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதுகுளத்தூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என வாக்குறுதி அளித்தார்.
-
பவுன்சர்களும் உணர்ச்சி வசப்படுகிறார்கள் – தவெக நிர்வாகி நிர்மல் குமார்
தொண்டர்களை பவுன்சர்கள் காலால் மிதத்தது குறித்த கேள்விக்கு தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பாதுகாவலர்களுக்கு நாங்களும் அறிவுறுத்துகிறோம். ஆனால் சில நேரங்களில் அவர்களும் அழுத்தத்துக்கு உள்ளாவதால் உணர்ச்சி வசப்படுகிறார்கள். தொண்டர்களை தாண்டி அதிகமாக பொதுமக்கள் இருக்கிறார்கள். அறிவிப்புகளை முதல் நாள் மாலை தான் வெளியிடுகிறோம்; அதையும் மீறி பெரும்பாலான பொதுமக்கள் வருகிறார்கள்
-
அன்புமணியை தேர்தலில் நிற்க வைத்தது நான் செய்த பெரும் தவறு – ராமதாஸ்
அன்புமணியை தேர்தலில் நிற்க வைத்தது நான் செய்த பெரும் தவறு. அந்த தவறுக்கான வினையை இப்போது அனுபவிக்கிறேன் என ராமதாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
லீமாரோஸ் மார்டினை ஆதரித்து பிரசாரம்
லால்குடி அதிமுக வேட்பாளர் டாக்டர் லீமாரோஸ் மார்டினை ஆதரித்து IJK கட்சியின் டாக்டர் ரவி பச்சமுத்து பரப்புரை மேற்கொண்டார்.
மக்களின் தேவைகளை நேரடியாக எடுத்துச் சென்று நிறைவேற்ற முயற்சி செய்யும் தலைவர்களே நமக்கு தேவையானவர்கள். அந்த வகையில், லீமா ரோஸ் மக்கள் சார்ந்த வேட்பாளர் என வாக்கு சேகரிப்பு -
தமிழக அரசின் செயல்பாடு கவலையை தருகிறது – பிரதமர் மோடி
தமிழக அரசு முறையாக செயல்பட்டிருந்தால் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கும். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு எப்படி எல்லாம் தடை போடுகிறது என்பதை மக்களுக்கு புரிய வையுங்கள். தமிழ்நாட்டில் நிலவும் போதைப் பொருள் புழக்கம் தாய்மார்கள், சகோதரிகள் மத்தியில் கவலையை தருகிறது என பிரதமர் மோடி கவலை தெரிவித்திருக்கிறார்.
-
தபால் ஓட்டு – சென்னை மாவட்ட தேர்தல் அலுவர் முக்கிய அறிவிப்பு
சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் மூத்த குடிமக்கள், வரையறுக்கப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட வாக்காளர்கள் ஏப்ரல் 16,17,18, 2026 ஆகிய தேதிகளில் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் வாக்குப்பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
-
விரைவில் குணமடைந்து திரும்புவேன் – வானதி சீனிவாசன் பகிர்ந்த வீடியோ
கோவை வடக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் அன்பாலும் வேண்டுதல்களாலும் நான் குணமடைந்து வருகிறேன். விரைவில் பரப்புரை செய்வேன். சிகிச்சை முடித்து விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன். என்னுடன் நின்ற அனைவரின் உழைப்பும் என் மனதில் பதிந்துள்ளது. உங்கள் பிரார்த்தனையே என் வலிமை என்று குறிப்பிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் வெளியிட்ட வீடியோ
வணக்கம் 🙏
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி 🙏
இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது.
உங்கள்… pic.twitter.com/RoZmAfMphZ— Vanathi Srinivasan (@VanathiBJP) April 13, 2026
-
சுதந்திரமாக வாக்களிக்கும் சூழல் தேவை – விஜய் கண்டனம்
தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வீட்டில் அனுமதியின்றி கட்சி ஸ்டிக்கர் ஒட்டியதை எதிர்த்த சகோதரிகளை தாக்கியதாக காணொளி பரவுகிறது. பொள்ளாச்சியில் மகளிர் மீதான இத்தகைய தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
உண்மையான TVK நாங்கள்தான்!
பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் வேணுகோபால், தமிழக வெற்றிக் கழகத்தினர் TVK என பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். உண்மையான TVK நாங்கள்தான் என புகார் அளித்துள்ளார்.
-
பள்ளிகளுக்கு விடுமுறை
ஆசிரியர்களுக்கான தேர்தல் பணி பயிற்சி வகுப்புகள் காரணமாக, திருச்சியில் ஏப்ரல் 14. 2026 அன்று அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப் பிரியா அறிவித்துள்ளார்.
-
பெண்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியைப் பொறுத்தவரை பெண்கள் மட்டுமே போட்டியிடக் கூடிய தொகுதியாக உள்ளது. இந்தத் தொகுதியில் தற்போது, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளர் இந்திராணி, அதிமுக வேட்பாளர் சத்யபாமா, தவெக வேட்பாளர் கவுரி சித்ரா, நாதக வேட்பாளர் திவ்யா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
-
ராமதாஸ் விரைவில் நலம்பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்
பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் நலம் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தேர்தல் பரப்புரையின் போது உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி மீண்டும் பொதுவாழ்க்கையில் தனது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
-
இயேசு சிலுவையை ஏன் சுமந்தார் தெரியுமா? – சீமான்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இறைமகன் இயேசு சிலுவையை ஏன் சுமந்தார் தெரியுமா? உலக மக்களின் பாவத்தை போக்குவதற்காக. உன் மகன் இந்தக் கலப்பையை சுமக்கிறேன். ஏன் தெரியுமா? என் மக்களின் பசியை போக்க இரண்டும் ஒன்றுதான் என்று பேசினார்.
– -
‘நமக்கு பிராக்டிக்கல் ரியாலிட்டி தெரியும்’
செங்கல்பட்டில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சினிமாவில் ஆட்டம்போடுகிறவர்கள் முதல்வராக முடியும் என்ற கனவு இருக்கிறது. நாம் கூட அடுத்த முதல்வர் என்று சொல்லவில்லை. நமக்கு பிராக்டிக்கல் ரியாலிட்டி தெரியும் என்று தெரிவித்தார்.
-
வருமான வரித்துறை சோதனை
அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தருமபுரியில் தவெக பரப்புரைக்கு அனுமதி
தருமபுரி பாப்பிநாயக்கனஹள்ளி பகுதியில் தவெக தலைவர் விஜய் ஏப்ரல் 14, 2026 அன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் வருமானவரித்துறை வழக்கு
ரூ.1.50 கோடி வருமான வரித்துறை அபராதத்தை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. வருமானத்தை மறைத்ததாக கடந்த 2022ம் ஆண்டில் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு விறுவிறு!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளுக்குமான தபால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
-
பெரம்பூரில் மீண்டும் பிரசாரம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏப்ரல் 20, 2026 அன்று தான் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதி பெறும் பணிகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!
தமிழகத்தில் தேர்தலை ஒட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21, 2026 முதல் ஏப்ரல் 23, 2026 வரை என் மொத்தம் 3 நாட்கள் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை
ஏப்ரல் 19ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார்
-
தவெக தலைவர் விஜய் நாளை திருப்பூரில் ரோடு ஷோ!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை திருப்பூரில் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
-
தீவிரமாக நடக்கும் வாக்கு சேகரிப்பு
தமிழ்நாடு முழுவதும் மிகவும் தீவிரமாக தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
-
மதுரை மக்கள் பதிலடி கொடுப்பார்கள்
இது குறித்து குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், செல்லூர் ராஜூவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லாமல் போனது. தேவரை அவமதிக்கும் செல்லூர் ராஜூவின் வார்த்தைக்கு மதுரை மக்கள் பதிலடி கொடுப்பார்கள் எனப்பேச்சு
-
கலவையான விமர்சனங்கள்
செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்கு பல தரப்பட்ட கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கின. பலரும் சோஷியல் மீடியாவில் இது குறித்து எழுதி வருகின்றனர்
-
முத்துராமலிங்கத்தேவரின் மறு உருவம் அண்ணாமலை
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சிங்கமாக, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அண்ணாமலை முத்துராமலிங்கத்தேவரின் மறு உருவம் என செல்லூர் ராஜூ பேச்சு
-
தொடர்ந்து தமிழ்நாடு விசிட்
ஏற்கெனவே 2 முறை தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நாகர்கோவில், கோவை என மொத்தமாக நான்காவது முறையாக தமிழ்நாடு வரவுள்ளார்
-
PM Modi Covai Visit : கோவையில் ரோடு ஷோவிலும் ஈடுபடும் பிரதமர் மோடி
பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
-
கோவையில் பிரதமர் மோடி
ஏப்ரல் 18ம் தேதி கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
-
மீண்டும் டெல்லி பயணம்
ரோடு ஷோவை முடித்துவிட்டு மாலை சுமார் 6 மணி அளவில் அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து, தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
பிரம்மாண்ட ரோடு ஷோ ஏற்பாடு
பிரதமர் நரேந்திர மோடி வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
-
PM Modi Visit : நாகர்கோயில் வரும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு ஏப்ரல் 15- ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வருகை தர உள்ளார். பிறகு, அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் நாகர்கோவிலுக்கு வருகை தர உள்ளார்.
-
Annamalai : அண்ணாமலை பிரசாரம்
தமிழ்நாடு பாஜகவின் அண்ணாமலை பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று 6 தொகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.
-
விஜய்யின் ஏஐ உருவத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பு
விஜய்யின் ஏஐ உருவத்தை பயன்படுத்தி தவெக வேட்பாளர் வாக்கு சேகரித்த வீடியோ இணையத்தில் வைரல்
வீடியோ
First LIVE DEPLOYMENT OF HOLOGRAPHIC AI communication device. 🤯😱
What a vision
What a thought process
This clearly shows how @TVKVijayHQ is way ahead of every other political parties.
This generation & the next will be lucky under TVK’s leadership. 👏🏻 pic.twitter.com/GTCBXL5rql— KARTHIK DP (@dp_karthik) April 13, 2026
-
பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் ஆலோசனை
தமிழக பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாட உள்ளார் பிரதமர் மோடி. தேர்தல் நேர ஆலோசனையாக இது இருக்குமென அறிவிப்பு
-
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!
அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேரிக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்று திருச்சி, திண்டுக்கல்பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்
-
MK Stalin : முக ஸ்டாலின் பிரசாரம் எங்கு?
திருவள்ளூரில் இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன்பின்னர் ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்திலும் பங்கெடுக்கிறார்
-
பாஜகவுக்கு பொறுமையில்லை – திருமா
எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றால் பாஜகவுக்கு பொறுமை இருக்காது. அண்ணாமலை கூட முதல்வராக வருவார் என திருமாவளவன் கருத்து.
-
தனியாக விஜய் – திருமா சொன்ன விளக்கம்
கூட்டணி இல்லாமல் விஜய்யை தனியாக நிறுத்தி இருப்பதே பாஜகதான் என தொல் திருமாவளவன் பேசியுள்ளார்
-
ஏமாந்த பெண்கள்
இந்த கூப்பனில் ரேஷன் கார்டு எண், வாக்காளர் பெயர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பெற்றுக் கொண்ட பெண்கள் உண்மையான ரூ.8000 கூப்பன் என நினைத்து அருகில் உள்ள வீட்டு பொருட்கள் விற்பனை கடைக்கு சென்று பொருட்களை கேட்டுள்ளனர்
-
சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார் ராமதாஸ்
சேலத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார் ராமதாஸ். சென்னையில் சிகிச்சை அளிக்க முடிவு
-
ரூ.8000க்கான மாதிரி கூப்பன்.
தருமபுரியில் திமுகவினர் கொடுத்த ரூ.8000க்கான மாதிரி கூப்பன்.
-
இரு அணிகளாக பாமக
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதேபோல, சட்டமன்ற தேர்தலிலும் அன்புமணி தலைமையிலான பாமக, ராமதாஸ் தலைமையிலான பாமக என தனித்தனியே போட்டியிட உள்ளது.
-
Anbumani Speech : அன்புமணி எச்சரிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் ” ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா, இதில் சம்பந்தப்பட்டவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்று அன்புமணி கூறினார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
Ramadoss health : சர்க்கரை அளவு குறைந்ததால் திடீர் மயக்கம்
பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில், அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் திடீர் மயக்கம் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்கு பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
ராமதாஸ் உடல்நிலை
நேற்று பிரச்சாரத்தை முடித்துவிட்டு மேடையில் இருந்து ராமதாஸ் இறங்கிய போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கினார். இதனை சுதாரித்த கட்சியினர் அவரை தாங்கி பிடித்து ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
Published On - Apr 13,2026 7:01 AM