Tamil Nadu Election 2026 Highlights : திமுகவின் ஊழல்கள் குறித்து தீவிரமாக விசாரணை – பிரதமர் மோடி உறுதி
Tamil Nadu Election 2026 Highlights: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், கோயம்புத்தூருக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரவிருக்கிறார். முதல்வரும் தேர்தல் பரப்புரைக்காக கோவை வரவிருப்பதாக கூறப்படும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூரில் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
LIVE NEWS & UPDATES
-
நாணயமற்ற கட்சி அதிமுக – மு.க.ஸ்டாலின் பேச்சு
தேர்தல் பரப்புரையின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக போன்ற நாணயமற்ற கட்சியை யாரும் பார்த்ததில்லை. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கிறது அதிமுக. அடிமைகளிடம் மறுபடியும் தமிழ்நாடு சிக்கலாமா? சிக்கினால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்காது. அடிமை அதிமுக, மதவாத பாஜகவிடம் இருந்து தமிழ்நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என பேசினார்.
-
“நம் சாதனைகளை மக்கள் பட்டியலிடுகின்றனர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பரப்புரையின்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் வாக்கு கேட்டு போகும் இடங்களிலெல்லாம் மக்கள் நம் சாதனைகளை பட்டியலிட்டு சொல்கின்றனர். திமுகவின் திட்டங்கள் சாதனைத் திட்டங்களாகத்தான் இருக்கும். நம் திட்டங்களை பிறர் காப்பியடிக்கின்றனர். நம் சாதனைகளைச் சொல்லி எனக்கே அசதியாகிவிட்டது. அதற்கு தனி மாநாடு போட வேண்டும். சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லாத பழனிசாமி அசிங்கமாக பேசுகிறார், சாபம் விடுகிறார்
அவருக்கு 11ஆவது தோல்வியை கொடுக்க வேண்டும். துரோகம் செய்யும் கூட்டத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார். -
வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தல் – எடப்பாடி பழனிசாமி
தேர்தல் பரப்புரையின்போது பேசிய, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நடக்கும் தேர்தல்
குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தல். மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவோம்; தீய சக்தி திமுக வேரோடு அழிக்கப்பட வேண்டும் என அதிமுக தோற்றுவிக்கப்பட்டது என்று தெரிவித்தார். -
ஸ்டாலின் அலை தான் அதிகம்
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் , திருச்சி மாநகரம் காட்டூர் பகுதிக்கு உட்பட்ட 38-வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர், ‘வெயிலின் தாக்கத்தை விட ஸ்டாலின் அலை தான் அதிகம்’ என பேசினார்
-
விஜய் வீட்டு வாசலில் விசில் கோலம்
தவெக தலைவர் விஜயின் நீலாங்கரை வீட்டின் வாசலில் விசில் சின்னத்தை கோலமாக பெண்கள் வரைந்தனர். அண்மையில் தங்கள் வீடுகளில் விசில் சின்னத்தை கோலமாக வரைந்திடுமாறு மக்களிடம் விஜய் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
கமலுக்கு சரியான வழி நடத்தல் இல்லை – அமீர்
இயக்குநர் அமீர் வார இதழுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சியோடு மேடைகளில் ஏறாமல், உறுப்பினராக இல்லாமல், தமிழ்த் தேசியவாதியாக இருந்தேன். பெரியார் முரண் போன்ற விஷயங்களில் வேறுபாடு ஏற்பட்டு அவர்களிடமிருந்து விலகிவிட்டேன். மக்கள் நீதி
மய்யம் ஆரம்பித்த போது ஆதரவு கொடுத்தேன். கமல்ஹாசன் மட்டும் அன்றைக்குச் சரியாக
ஜொலித்திருந்தால், இன்றைக்கு முக்கியமான ஆளாக இருந்திருப்பார். அவருடைய அரசியலும் சரியான வழிநடத்தல் இல்லாமல் போய்விட்டது என்று தெரிவித்தார். -
முதல்வர் பற்ற வைத்த தீ – உதயநிதி ஸ்டாலின் பேச்சு
திருச்செங்கோட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நாமக்கல்லில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு முதல்வர் தீ வைத்தார்; அந்த தீ பரவி மசோதா தோல்வி அடைந்திருக்கிறது என்றார்.
-
‘தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்’
துறையூரில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பாஜகவின் நோக்கம் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துவதுதான். சமூக நீதியை தமிழ்நாட்டில் இருந்து தான் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சமூக நீதி கடைப்பிடிக்கப்படுவதை பாஜக விரும்பவில்லை என்று பேசினார்.
-
பிரதமர் மோடியால் எங்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை – ராகுல் காந்தி
துறையூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டிரம்ப் கூறுவதைத்தான் மோடி செய்வார். பிரதமர் மோடியால் எங்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை என்றார்.
-
தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், “பெரியார், கர்பூரி தாக்கூர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு ஒன்றிணைவோம். தமிழ்நாட்டுக்கு வருக சகோதரரே என குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ்நாடு இழந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி கருத்து
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உரிய அளவில் கூடுதலாக 20 எம்.பி.க்களைப் பெறும் வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் சுனில் ஆனந்த், பெரிய பள்ளிவாசல் பகுதியில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிறுமுகை சாலையில் உள்ள பள்ளி வாசலுக்கு சென்ற வேட்பாளர், தொழுகை முடித்து வந்தவர்களிடம் வாக்கு கேட்டதோடு, வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்களாக வழங்கினார்.
-
பனையூரில் விஜய் ஆலோசனை
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பெரம்பூர் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
-
வேட்பாளருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்பு
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி அதிமுக தொண்டர்கள் அவருக்கு 40 கிலோ எடையுள்ள ஏலக்காய் மாலையை ராட்சத கிரேன் மூலம் அணிவித்து செங்கோல் வழங்கி மக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
-
வானதியை நலம் விசாரித்த தவெக வேட்பாளர்
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடந்த ஒரு வாரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அதே தொகுதி தவெக வேட்பாளர் சம்பத்குமார் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று வானதி சீனிவாசனின் இளைய மகன் கைலாசிடம் நலம் விசாரித்தார்.
-
வானகரத்தில் அரசு மருத்துவமனை
அமதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர் பெஞ்சமின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வானகரத்தில் 24 மணி நேரம் செயல்படும் அரசு மருத்துவமனை அமைக்கப்படும். ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதிகளை வழங்கினார்.
-
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் – ராகுல் காந்தி
சோளிங்கரில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது பேசிய அவர், பாஜக, ஆர்எஸ்எஸ் எப்போதும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்று பேசினார்.
-
எங்கள் கூட்டாளி ஸ்டாலின் – ராகுல் காந்தி பேச்சு
சோளிங்கர் பரப்புரை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்நாங்கள் எப்போதும் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள முயற்சிக்கவில்லை. எங்கள் கூட்டாளி ஸ்டாலின். நாங்கள் எப்போதும் திமுகவை பயன்படுத்தவில்லை என்று பேசியுள்ளார்.
-
‘பெண்களுக்கு அநீதி இழைத்துள்ளார் ஸ்டாலின்’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின் போது பேசியதாவது, மகளிர் மசோதாவை தடுத்து இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு ஸ்டாலின் அநீதி இழைத்துள்ளார்
பெண்கள் அதிகாரமயமாக்கலுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பை சீர்குலைத்ததை கொண்டாடினீர்களா? தமிழ்நாடு தன் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டது. பிரதமர் வழங்கிய 50% கூடுதல் இடங்கள் பெறுவதற்கான பொன்னான வாய்ப்பை நாம் இழந்துள்ளோம். நியாயமாக சேர வேண்டிய 20 எம்பி தொகுதிகளை பெறுவதற்கான வாய்ப்பை தமிழகம் தவறவிட்டது எதை நீங்கள் சரியாக கொண்டாடி உள்ளீர்கள்? தமிழகத்தின் எதிர்காலத்துக்கு ஏற்படுத்திய பாதிப்பையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். -
அதிமுக என்ற கட்சியே இல்லை – ராகுல் காந்தி விமர்சனம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூரில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய ராகுல்காந்தி, அதிமுக என்ற ஒரு கட்சியே தற்போது தமிழ்நாட்டில் இல்லை. அதிமுக என்ற கட்சியை முடித்து விட்டது பாஜக. ஒரு காலத்தில் திமுகவுக்கு இணையாக இருந்த கட்சி அதிமுக, தற்போது பாஜகவின் முகமூடி போன்று இருக்கிறது என்று பேசினார்.
-
துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்
அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் அருகே அண்ணா நகர் திமுக வேட்பாளர் சிற்றரசை ஆதரித்து துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்
-
இதுதான்டா திமுக – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்த மசோதா முதன்முறையாக தோல்வியடைந்துள்ளதவடக்கு, தெற்கு என நமக்குள் பிளவு ஏற்படுத்தி சண்டையிட வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு சரியான சம்மட்டி அடி. பழைய திமுக என்றால் என்ன என கேட்ட அரைவேக்காடுகளுக்கு இதுதான்டா திமுக என நேற்று காட்டியிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
உஷாராக இருங்கள்
தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திசை திருப்பும் முதலீட்டு கழகம், பல்வேறு வழிகளில் மக்களை குழப்புவதற்காக முயற்சிக்கிறது. தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று, இருந்தும் உஷாராக இருக்க வேண்டும். திமுகவுக்கு மறுமுறை. வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் தேர்தல் வரலாறு. Limitation இல்லாமல் அராஜகம், பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுக. கடைசி நேரம் வரை காத்திருக்க வைத்து அனுமதி கடிதம் கொடுக்காமல் தேர்தல் பிரச்சாரம் தடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டை காத்து வருகிறார்கள் – ராகுல்
பாஜகவின் தாக்குதலில் இருந்து திமுகவும், இந்தியா கூட்டணி சகோதரர்களும் தமிழ்நாட்டை காத்து வருகிறார்கள் – ராகுல்
-
டெல்லியிடம் சரண்டையும் முதல்வர் வேண்டும் என பாஜக நினைக்கிறது
டெல்லியிடம் சரண்டையும் முதல்வர் வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. மோடி, அமித்ஷா உத்தரவை செயல்படுத்தும் ஒருவரை தமிழ்நாட்டின் முதல்வராக்க பாஜக நினைக்கிறது -ராகுல்
-
தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் – ராகுல்காந்தி
பாஜக, ஆர்எஸ்எஸ் இணைந்து தமிழ்நாட்டு மக்களை, தமிழ் மொழியை தாக்குகிறார்கள், அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் – ராகுல்காந்தி
-
தமிழ் மண்ணோடு நெருக்கமான உறவு – ராகுல்காந்தி
நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை, ஆனால் தமிழ் மண்ணோடு நெருக்கமான உறவு உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
-
பாஜகவால் தொடக்கூட முடியாது – ராகுல் காந்தி
தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது – ராகுல் காந்தி
-
ரூட் மாற்றம்
நீலாம்பூர் பகுதியில் இருந்து கோவை நகர் பகுதிக்கு வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவில் வலது புறமாக திரும்பி தொட்டிபாளையம், கைகோலப்பாளையம், காலப்பட்டு நான்கு சாலை, விளாங்குறிச்சி வழியாக கோவை நகருக்குள் வர வேண்டும்.
-
என்ன மாற்றம்?
சேலம் மற்றும் ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து விமான நிலையம் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
-
போக்குவரத்து மாற்றம்
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் கோவை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர். இதன் காரணமாக கோவை நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
கோவையில் மையமிடும் 3 துருவங்கள்
தேர்தல் பரப்புரைக்காக கோவையில் மையமிடும் 3 துருவங்கள். மாநகரில் போக்குவரத்து மாற்றம்
-
திமுகவுடன் கைகோர்த்து இருந்தார் – ஈபிஎஸ்
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்த போது திமுகவின் பீ டீமாக செயல்பட்டு வந்தார். திமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுகவுடன் கைகோர்த்து இருந்தார் – ஈபிஎஸ்
-
மோசமான குணம் உடையவர் செங்கோட்டையன் -ஈபிஎஸ்
மோசமான குணம் உடையவர் செங்கோட்டையன். இப்படி ஒரு நபர் நாட்டுக்கு தேவையா. செங்கோட்டையன் இருக்கும் வரை மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. – ஈபிஎஸ்
-
என்னிடம் கெஞ்சினார் செங்கோட்டையன் – ஈபிஎஸ்
நான் முதல்வரான பின்னர் செங்கோட்டையனை அமைச்சரவையில் சேர்த்தது முதல் தவறாகும். செங்கோட்டையன் என்னிடம் அமைச்சர் பதவி வேண்டும் என்று கெஞ்சினார் – இபிஎஸ்
-
செங்கோட்டையனை விமர்சித்த ஈபிஎஸ்
அதிமுகவில் செங்கோட்டையன் இருந்த போது, ஓட்டு வீட்டில் வசித்து வந்த அவர் பங்களா வீடு கட்டியது எப்படி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம்
-
பாஜகவை எதிர்க்கும் தைரியம் எடப்பாடிக்கு உண்டா? – ஸ்டாலின் கேள்வி
கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் சொத்துகளைப் பறிக்கும் வக்ஃப் சட்டத் திருத்தம் போன்ற விவகாரங்களில் பாஜகவை எதிர்க்கும் தைரியம் எடப்பாடிக்கு உண்டா? – ஸ்டாலின் கேள்வி
-
எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா? – ஸ்டாலின்
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி ஒதுக்கப்படும் என்ற மத்திய அமைச்சரின் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா? – ஸ்டாலின்
-
உண்மையான நிலைப்பாடு என்ன?
திருவள்ளுவருக்குக் காவி பூசுவது, மும்மொழிக் கொள்கை மற்றும் தேசியக் கல்விக் கொள்கை ஆகியவற்றில் அதிமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்
-
தோல்வி பழனிசாமி என சாடிய ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி 10 தோல்வி பழனிசாமி என மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
-
லேப்டால் முதல் வீடு வரை
- இலவச மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும்.
- பட்டியல் இன, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு பலன் அளிக்கக்கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு 5 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
-
சசிகலா வாக்குறுதிகள் சில
- மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,250- ஆக உயர்த்தப்படும்.
- கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,250- ஆக உயர்த்தப்படும்.
- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
- மீனவர்களுக்கான டீசல் மானியம் உயர்த்தி வழங்கப்படும்.
-
தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட சசிகலா
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அதன் தலைவர் சசிகலா வெளியிட்டுள்ளார்.
-
விஜய் தோற்றத்தில் வாக்கு சேகரிப்பு
கொளத்தூர் தொகுதியில் விஜய் போன்ற தோற்றத்தில் இருந்தவர் வி.எஸ்.பாபுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
விஜய் வீடு வீடாகப் பரப்புரை செல்ல திட்டமிட்டுள்ளதால், பெரம்பூர் பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. இதனால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
-
உற்சாக வரவேற்பு
விஜய்யின் வருகையை முன்னிட்டு பெரம்பூர் தொகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பெண்கள் அவருக்கு ஆர்த்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்க திட்டமிட்டுள்ளனர்
-
நேரடியாகச் சென்று வாக்கு சேகரிப்பு
வீடுகளுக்கு நேரடியாகச் சென்று முதியவர்கள் மற்றும் பெண்களிடம் ஆசி பெற்று, அவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கேட்டறிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
நடைபயணமாக செல்லும் விஜய்?
பெரம்பூர் தொகுதியின் முக்கிய வீதிகளில் விஜய் நடைப்பயணமாகச் சென்று மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பாதுகாப்பு தீவிரம்
பிரதமரின் நிகழ்ச்சிக்காக கோவை விமான நிலையம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானம் வரை சிறப்பு பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மாவட்ட போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
-
அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்வில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
-
மீண்டும் டெல்லிக்கு
சுமார் 5 மணியளவில் தொடங்கும் இந்த பொதுக்கூட்டமானது ஒரு மணி நேரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பொது கூட்டத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
-
இன்று மாலை வரும் பிரதமர் மோடி
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தடைகிறார்.
-
PM Modi TN Visit : பிரதமர் மோடி கோவை வருகை
கோவை மாவட்டம், கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 18) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்
Published On - Apr 18,2026 7:20 AM