ஓட்டு வீட்டில் இருந்த செங்கோட்டையனுக்கு பங்களா வீடு-கல்லூரி எப்படி வந்தது… எடப்பாடி கடும் விமர்சனம்!

Eps Criticized Sengottaiyan : அதிமுகவில் செங்கோட்டையன் இருந்த போது, ஓட்டு வீட்டில் வசித்து வந்த அவர் பங்களா வீடு கட்டியது எப்படி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்ததுடன் கேள்விகளை எழுப்பினார் .

ஓட்டு வீட்டில் இருந்த செங்கோட்டையனுக்கு பங்களா வீடு-கல்லூரி எப்படி வந்தது… எடப்பாடி கடும் விமர்சனம்!

செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்த எடப்பாடி

Updated On: 

18 Apr 2026 10:58 AM

 IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 18) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: அதிமுகவின் கட்டுப்பாடுகளை மீறிய செங்கோட்டையன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மோசமான குணம் உடையவர் செங்கோட்டையன். இப்படி ஒரு நபர் நாட்டுக்கு தேவையா. செங்கோட்டையன் இருக்கும் வரை மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது செங்கோட்டையனின் மனைவி மற்றும் மகன் அவரிடம் புகார் அளித்தனர். சிறிது நேரத்திலேயே செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டது.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்த போது திமுகவின் பீ டீமாக செயல்பட்டு வந்தார். திமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுகவுடன் கைகோர்த்து இருந்தார்.

ஸ்டாலின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினேன்

நான் மு. க. ஸ்டாலின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவன். செங்கோட்டையன் ஓட்டு வீட்டில் இருந்து பங்களா கட்டியது எப்படி. கல்லூரி எப்படி வந்தது. மரத்தில் இருந்து பணத்தை பறித்தாரா. செங்கோட்டையனுக்கு நாவடக்கம் தேவை. அப்படிப்பட்ட நபரை நான் முதல்வரான பின்னர் எனது அமைச்சரவையில் சேர்த்தது முதல் தவறாகும். செங்கோட்டையன் என்னிடம் அமைச்சர் பதவி வேண்டும் என்று கெஞ்சினார். மத்திய அரசின் நிதி இல்லாமல் தமிழக அரசின் நிதி ரூ.1,652 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க: தூத்துக்குடி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோடை விடுமுறைக்காக சிறப்பு ரயில்கள்.. லிஸ்ட் இதோ!

திமுகவின் உளவாளி செங்கோட்டையன்

இதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படம் இல்லை என்று செங்கோட்டையன் கூட்டத்தை புறக்கணித்து இருந்தார். அதன் பின்னர், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை செங்கோட்டையன் வழங்கினார். அப்போதே தெரியும் இவர் திமுகவின் பி டீம் என்று. இதன் மூலம் திமுகவின் உளவாளியாக செங்கோட்டையன் இருப்பதை நான் கண்டுபிடித்தேன்.

நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு

சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஒரு வார்த்தை கூட திமுகவினரை செங்கோட்டையன் எதிர்த்து பேசியது கிடையாது. நெடுஞ்சாலை துறையில் நான் ஊழல் செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில், அந்த வழக்கை வாபஸ் பெற முயன்றனர். ஆனால், நான் அந்த வழக்கை நடத்துவதாக தெரிவித்தேன். அப்போது, இந்தியாவிலேயே தனக்கு எதிரான வழக்கை நடத்தும் ஒரே தலைவர் நான் தான் என்று நீதிபதி குறிப்பிட்டார். அதனால், வரலாறு தெரியாமல் செங்கோட்டையன் ஆடக்கூடாது. நான் முதல்வராக இருந்தபோதே யார் யார் மீது என்னென்ன வழக்குகள் இருந்தது என்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நான் எடுத்து வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: கோவையில் மையமிடும் 3 துருவங்கள்.. மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!

Follow Us
Related Stories
“திமுக பற்றவைத்த தீ நாடாளுமன்றம் வரை பரவியது”.. புது வரலாறு படைத்துள்ளோம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!
“தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!
பெரம்பூர் – திருச்சி கிழக்கு தொகுதி.. EVM- இல் விஜய்யின் பெயர்- சின்னம் எங்கே இருக்கும் தெரியுமா?
கோவையில் மையமிடும் 3 துருவங்கள்.. மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!
“10 தோல்வி பழனிசாமிக்கு 10 கேள்விகள்”.. முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக எழுப்பிய அனல் பறக்கும் கேள்விகள்..
சசிகலாவின் மெகா வாக்குறுதிகள்.. இலவச லேப்டாப் முதல் மகப்பேறு நிதியுதவி வரை!
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..