உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள ஒரு கிளினிக்கில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் மூடப்பட்டிருந்த கிளினிக்குள் நுழைய முயன்ற சிறுவன், ரோலிங் ஷட்டர் மற்றும் சுவருக்கிடையில் சிக்கிக் கொண்டார். அடுத்த நாள் காலை கிளினிக் ஊழியர்கள் கதவை திறக்க முயன்றபோது ஷட்டர் நகரவில்லை.