பெங்களூரு போன்ற உயர்ந்த வாழ்க்கைச் செலவுகள் கொண்ட நகரத்தில், வெறும் 500 ரூபாயில் வாழ முடியும் என்பதை நிரூபித்துள்ள ஒரு பெண்ணின் அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரியங்கா மொண்டல், தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். ஒரு நாள் முழுவதையும் குறைந்த செலவில் எப்படி சமாளிக்கலாம் என்பதை சோதித்து பார்க்கவே அவர் இந்த முயற்சியை மேற்கொண்டார்.