AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்.

Delimitation Bill In Parliament: இந்த வாக்கெடுப்பில் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 278 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 211 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை.

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்.
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Apr 2026 22:58 PM IST

திண்டுக்கல், ஏப்ரல் 17, 2026: தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அரசியலமைப்பு சட்டம் 131வது திருத்தத்தின் படி, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 2026 யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட இருந்தன. கடந்த இரண்டு நாட்களாக இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இன்று அவற்றின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி:

இந்த வாக்கெடுப்பில் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 278 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 211 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை.

இந்த மசோதாவுக்கு ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மசோதா தோல்வியடைந்ததை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

அதில், “டெல்லியை தமிழ்நாடு வீழ்த்தியது. வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி, டெல்லியின் ஆணவத்தையும் அடிமைத்தனத்தையும் ஒன்றாக சேர்ந்து வீழ்த்துவோம்” என குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்திய கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்:

இதற்கிடையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இதுகுறித்து தனது பதிவில், “தொகுதி மறுவரையறை கருப்பு சட்டத்தை எதிர்த்து கருஞ்சட்டை அணிந்து ஆண்டிப்பட்டியில் மேடை ஏறினேன். வெற்றி செய்தி வந்ததும் மீண்டும் வெள்ளை உடைக்கு மாறி வெடி வெடித்து திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆரவாரம் மத்தியில் மேடை ஏறினேன். திண்டுக்கல் தரும் இந்த திடமான வெற்றியுடன் மே 4ஆம் தேதி ஏழாவது முறையாக கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us