தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!
Premalatha Vijayakanth : தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிருபிக்கும் போது, அந்த அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று தே. மு. தி. க. பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம். எல். ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 தொகுதிகளின் வேட்பாளர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர். அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து, விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. வாக பதவி ஏற்றார். அப்போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுக்கு எழுந்து நின்றதுடன் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தினார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் வெளியே செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
விருத்தாசலம் மக்களுக்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
விருதாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக நான் இன்று பதவி ஏற்று உள்ளேன். என்னை வெற்றி பெற வைத்த விருதாச்சலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலினுக்கும், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெற்ற வெற்றியை தேமுதிகவின் முன்னாள் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் உரித்தாக்குகிறேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது விருதாச்சலம் தொகுதி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.
மேலும் படிக்க: கோட் சூட் போட்ட விஜய்.. எம். எல்.ஏ.க்கள் பதவியேற்பு.. முதல் நாள் சட்டப்பேரவையில் நடந்தது என்ன?




தமிழக வெற்றிக் கழக அரசு ஆதரவு கிடையாது
தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் விஜய் பெரும்பான்மை நிரூபிப்பதற்கு கட்டாயம் நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு உரிய கால அவகாசத்தை கொடுப்போம். நாளை மறுநாள் மே 13- ஆம் தேதி ( புதன்கிழமை) நடைபெற உள்ள பெரும்பான்மை நிரூபிப்பின் போது, நான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டேன். திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிக்கே ஆதரவு தெரிவிப்பேன்.
தவெகவுக்கு எதற்காக ஆதரவு கிடையாது
சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால் எனது வாக்கை அந்த கட்சிக்கே செலுத்துவேன் என்று தெரிவித்தார். அதன் பிறகு மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம். தேர்தல் நேரத்தில் தவெகவுடன், தேமுதிக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக திமுவில் இணைந்தது. இதில், ஒரு மாநிலங்களை உறுப்பினர் இடம், 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழக சட்டசபை சபாநாயகர் தேர்தல்.. தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகரை களமிறக்கிய முதல்வர் விஜய்!!