விஜய் அரசின் முதல் சட்டப்பேரவை கூடுகிறது.. இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு!
மற்ற அனைத்து உறுப்பினர்களும் அகர வரிசைப்படி அழைக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் தங்கள் வெற்றிச் சான்றிதழைப் பேரவை முதன்மைச் செயலாளரிடம் சமர்ப்பித்து, உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். பின்னர் பதிவேட்டில் கையெழுத்திட்டுப் பதவியேற்பு நிகழ்வை நிறைவு செய்வார்கள். இந்த 17-வது சட்டப்பேரவையில் மொத்தம் 22 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை தொடங்குகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் ஒன்பது அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, சோழவந்தன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டு, அவருக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையும் படிக்க: முதலமைச்சர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.. அனல் பறக்கும் சட்டமன்றம்.. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்!!
இன்றைய பேரவை நிகழ்வுகள்:
சட்டமன்றம் இன்று காலை 9.30 மணிக்குக் கூடியதும் பின்வரும் நிகழ்வுகள் வரிசையாக நடைபெறும். தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் வரவேற்று உரையாற்றுவார். முதலமைச்சர் விஜய் முதலில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் பேரவைத் தலைவர் ஆகியோர் பதவியேற்பார்கள்.
அகர வரிசைப்படி பதவியேற்பு:
மற்ற அனைத்து உறுப்பினர்களும் அகர வரிசைப்படி (Alphabetical Order) அழைக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் தங்கள் வெற்றிச் சான்றிதழைப் பேரவை முதன்மைச் செயலாளரிடம் சமர்ப்பித்து, உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். பின்னர் பதிவேட்டில் கையெழுத்திட்டுப் பதவியேற்பு நிகழ்வை நிறைவு செய்வார்கள். இந்த 17-வது சட்டப்பேரவையில் மொத்தம் 22 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்று முடிந்ததும், இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும்.
இதையும் படிக்க : பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!
அடுத்தடுத்த முக்கியக் கட்டங்கள்:
நாளை (மே 12) சட்டமன்றம் மீண்டும் கூடியதும், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். நாளை மறுநாள் (மே 13) முதலமைச்சர் விஜய் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ நடைபெறும். இதன் மூலம் விஜய் அரசு தனது பலத்தை அதிகாரப்பூர்வமாகச் சட்டமன்றத்தில் நிரூபிக்கும். தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் பார்க்கப்படுகிறது.