பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள். அதெல்லாம் இருக்கிறது. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, மே 10, 2026: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வாழ்த்துகளை தெரிவித்ததோடு, பல்வேறு கேள்விகளையும் அவர் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 10, 2026