AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டசபை சபாநாயகர் தேர்தல்.. தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகரை களமிறக்கிய முதல்வர் விஜய்!!

நாளை (மே 12) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அவர் முறைப்படி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

தமிழக சட்டசபை சபாநாயகர் தேர்தல்.. தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகரை களமிறக்கிய முதல்வர் விஜய்!!
ஜே.சி.டி.பிரபாகர்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 May 2026 13:04 PM IST

தமிழகத்தின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து, சட்டசபையின் மிக முக்கிய பதவியான சபாநாயகர் பதவிக்கான தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான ஜே.சி.டி.பிரபாகர், சபாநாயகர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ படிவத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இதையும் படிக்க: கோட் சூட் போட்ட விஜய்.. எம். எல்.ஏ.க்கள் பதவியேற்பு.. முதல் நாள் சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

தேர்வு மற்றும் அனுபவம்:

ஜே.சி.டி.பிரபாகர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். அவரது இந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டே, தவெக தலைமை அவரை சபாநாயகர் பதவிக்குப் பரிந்துரை செய்துள்ளது. நாளை (மே 12) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அவர் முறைப்படி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். அவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மரபுப்படி முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவரும் அவரை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைப்பார்கள்.

நடப்பு நிகழ்வுகள்:

இதனிடையே, சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா, தற்காலிக சபாநாயகராக இருந்து புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்றைய பதவியேற்பு நிகழ்வுகள் முடிந்த நிலையில், நாளை நிரந்தர சபாநாயகர் தேர்வு நடைபெறும். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு, இந்தப் புதிய அரசு தனது பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் நிரூபிக்கும் நிகழ்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தவெகவின் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாகியான ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவீன சட்டமன்ற நடைமுறைகள்:

முதலமைச்சர் விஜய் தனது உடையில் காட்டிய நவீனத்தைப் போலவே, சட்டமன்ற விவாதங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் புகுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற நிகழ்வுகளைப் பொதுமக்களுக்கு இன்னும் எளிமையாகக் கொண்டு செல்ல புதிய முன்னெடுப்புகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தொடர் வெறும் பதவியேற்பு விழாவாக மட்டுமில்லாமல், தமிழக அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியப் புள்ளியாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க: முதலமைச்சர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.. அனல் பறக்கும் சட்டமன்றம்.. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்!!

Follow Us