AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதல்வர் ஜோசப் விஜய்.. பரபரப்பில் அரசியல் களம்!

CM Joseph Vijay Meet MK Stalin : திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலினை, தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதல்வர் ஜோசப் விஜய்.. பரபரப்பில் அரசியல் களம்!
மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்திக்கிறார்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 11 May 2026 12:04 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பதவி செய்திருந்தது. ஆனால், பெரும்பான்மை இல்லாத நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் திராவிட கழக தலைவர் கீ. வீரமணியை சந்தித்திருந்தார். இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டில் அவரை விஜய் சந்திக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அத்துடன் இந்த சந்திப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள திராவிட முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு மு. க. ஸ்டாலின் தரப்பில் இருந்து நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் இன்று மு. க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக மற்றும் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த விஜய்

தமிழக அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம், அதன் தலைவர் விஜய் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார். தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநில மாநாடு முதல் தற்போது வரை திராவிட முன்னேற்ற கழக அரசையும், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையே தான் போட்டி என தெரிவித்திருந்தார்.

திமுக ஒரு தீய சக்தி – தவெக தூய சக்தி

அத்துடன், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தீய சக்தி, தமிழக வெற்றி கழகம் ஒரு தூய சக்தி என்பன உள்ளிட்ட வார்த்தைகளால் கடுமையான விமர்சனங்களை விஜய் முன்வைத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலினை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாக வெளியான தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

Follow Us