பாஜக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்… அண்ணாமலை போட்டியா? நயினார் எந்த தொகுதி!
BJP Proposed Candidates List: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் முதல் கட்ட உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் உள்ளது.

பாஜக உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் kட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று புதன்கிழமை ( மார்ச் 25) வெளியிட்டிருந்தார். இதில், பாரதீய ஜனதா கட்சிக்கு மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்கு, கோயம்புத்தூர் வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய 27 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்கான கூட்டம் சென்னையில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி. எல். சந்தோஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
மேலும் படிக்க: O.S. Manian Tamil Nadu Election: வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் கோலோச்சுவாரா ஓ.எஸ்.மணியன்!
பாஜக வேட்பாளர்கள் முதல் கட்ட உத்தேச பட்டியல்
இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்டபார்களின் முதல் கட்ட உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. அதில்,
- அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.
- சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
- நாகர்கோவில் தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன்.
- மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன்.
- கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன்.
- விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி.
- தளி தொகுதியில் அமர் பிரசாத்ரெட்டி.
- தஞ்சை தொகுதியில் கருப்பு முருகானந்தம்
- மதுரை தெற்கு தொகுதியில் ராம சீனிவாசன்.
- மொடக்குறிச்சி தொகுதியில் கிருத்திகா சிவகுமார்
- திருப்பூர் தெற்கு தொகுதியில் ஏ. பி. முருகானந்தம்
- திருச்செந்தூர் தொகுதியில் கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன்
- பத்மநாபபுரம் தொகுதியில் எட்வின் ஜோஸ்.
- குளச்சல் தொகுதியில் சிவகுமார்
- புதுக்கோட்டை தொகுதியில் ராமச்சந்திரன்.
- வாசுதேவநல்லூர் தொகுதியில் ஆனந்தன் ஐயா சாமி.
- ராமநாதபுரம் தொகுதியில் ஜி.பி.எஸ். நாகேந்திரன்.
- ராசிபுரம் (தனி) தொகுதியில் டாக்டர் பிரேம் குமார்.
- ஆவடி தொகுதியில் அஸ்வின்.
- ஊட்டி தொகுதியில் போஜராஜன் (அ) உமாதேவி.
- கந்தர்வன்கோட்டை தொகுதியில் (தனி) புரட்சி கவிதா.
- திருப்பத்தூர் தொகுதியில் சோழன் பழனிச்சாமி.
- அறந்தாங்கி தொகுதியில் கவிதா ஸ்ரீகாந்த்
- ராமநாதபுரம் தொகுதியில் பாலகிருஷ்ணன்
- திருவாரூர் தொகுதியில் பண்ணை வயல் இளங்கோவன்.
- மானாமதுரை தொகுதியில் பொன் பாஸ்கர்.
ஆகியோர் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்த பட்டியலானது பாஜக தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில், சில நாள்களில் அதிகாரப்பூர் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: T.R.B. Rajaa Tamil Nadu Election: மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா மும்முறை வெற்றி.. மீண்டும் வெற்றி வசமானால் அமைச்சரவையில் இடம் உறுதி?