AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sourav Ganguly: சச்சினா? கோலியா? யார் சிறந்த வீரர்கள்..? டிவி9க்கு கங்குலி பிரத்யேக பேட்டி!

Virat Kohli vs Sachin Tendulkar: சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் - கோலி ஆகியோரில் யார் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் கேட்கப்பட்டு வருகிறது. இதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமும் இதுகுறித்தான கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்தநிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியிடம் சச்சின் டெண்டுல்கர் அல்லது விராட் கோலி? யார் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

Sourav Ganguly: சச்சினா? கோலியா? யார் சிறந்த வீரர்கள்..? டிவி9க்கு கங்குலி பிரத்யேக பேட்டி!
சச்சின் மற்றும் கோலியுடன் கங்குலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Mar 2026 14:59 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் (Indian Cricket Team) ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளனர். அளவுக்கு அதிகமான சதங்களுடன் அளவுக்கு அதிகமான ரன்களையும் குவித்துள்ளனர். இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் இந்த இருவரில் யார் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் கேட்கப்பட்டு வருகிறது. இதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமும் இதுகுறித்தான கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்தநிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியிடம் சச்சின் டெண்டுல்கர் அல்லது விராட் கோலி? யார் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய அட்டவணை.. களமிறங்கும் கோலி, ரோஹித்!

சவுரவ் கங்குலி பதில்:


TV9-க்கு அளித்த பேட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியிடம், ”ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது, ஒரு முடிவில்லாத விவாதம், அதற்கு ஒரு முடிவு வேண்டும். விராட்டா அல்லது சச்சினோ?” என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கங்குலி, ” முதலில் எக்காலத்திலும் அப்படிக் கேட்காதீர்கள். இருவருமே மிகச் சிறந்த வீரர்கள். மேலும் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இருவரும் இந்தியாவுக்காக எண்ணற்ற போட்டிகளை வென்று கொடுத்துள்ளனர். உங்களால் அதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது, ஏனென்றால் நீங்கள் விளையாடும்போதுதான், இத்தனை ரன்கள் எடுப்பதும், இத்தனை சதங்கள் அடிப்பதும் எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள்” என்றார்.

சச்சின் ஒரு சிறந்த வீரர்:

தொடர்ந்து பேசிய கங்குலி, “சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறந்த வீரர். நான் அவரை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன், அவருடன் விளையாடியிருக்கிறேன். 250-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் அவருடன் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கியுள்ளேன். நான் வீட்டிற்கு வரும்போதெல்லாம், என் ஆட்டம் தரம் குறையக்கூடாது என்று சொல்வேன். சில சமயங்களில் என் மனைவி, ‘ஏன் உங்கள் ஆட்டம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது?’ என்று கேட்பார். நான் சொல்வேன், ” ‘மறுமுனையில் ஒரு சிறந்த வீரர் இருக்கிறார்,’ என்றால் ஒரு முனையில் ஒரு சராசரி வீரர் இருக்க வேண்டு. அதனால், என் ஆட்டம் தரம் குறைய நான் ஒருபோதும் விரும்பவில்லை. வாழ்க்கையில் நான் ஒரு விஷயத்தை நம்புகிறேன். உங்களை விடச் சிறந்த வீரர்களாகவும், உங்களை விட வலிமையானவர்களாகவும் இருக்கும் நல்ல மனிதர்களுடன் நீங்கள் விளையாடினால், உங்கள் ஆட்டமும் மேம்படும், ஏனென்றால் உங்கள் தரமும் அந்த அளவிற்கு உயர்ந்துவிடும். எனவே, என் கருத்துப்படி, விராட் கோலிக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையில் எந்த ஒப்பீடும் இருக்கக்கூடாது. இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். நான் சச்சினை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன், அவர் ஒரு சிறந்த வீரர்.” என்று தெரிவித்தார்.

சச்சின்-விராட்டின் செயல்பாடு:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 28,215 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். கோலி 53 சதங்களை அடித்துள்ள நிலையில், டெண்டுல்கர் 49 சதங்களை அடித்துள்ளார்.

ALSO READ: 5 டி20 போட்டிகள்..! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான வலுவான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் 51 சதங்களையும், கோலி 30 சதங்களையும் அடித்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் டெண்டுல்கர் மொத்தம் 15,921 ரன்களும், கோலி 9,230 ரன்களும் எடுத்துள்ளனர். விராட் டி20 சர்வதேசப் போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

Follow Us