AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிற பாகுபாடு – பிசிசிஐ கமெண்ட்ரியில் இருந்து விலகிய லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் – பகீர் குற்றச்சாட்டு

Sivaramakrishnan Quits Commentary : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பிரபல கமெண்டேட்டுருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தனக்கு 23 ஆண்டுகளாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் இதன் காரணமாக பிசிசிஐ கமெண்ட்ரியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணமாக அவர் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நிற பாகுபாடு – பிசிசிஐ கமெண்ட்ரியில் இருந்து விலகிய லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் – பகீர் குற்றச்சாட்டு
லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Mar 2026 21:00 PM IST

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷமண் சிவராமகிருஷ்ணன் பிசிசிஐ கமெண்ட்ரியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு பின்னால் நிற பாகுபாடு காரணமாக தனக்கு வாய்ப்புகள் வழங்கப்படாதது தான் என அவர் பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். லெக் ஸ்பின் பந்துவீச்சாளரான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், இந்திய அணிக்காக 1983 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை விளையாடினார். கடந்த 1983 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியுள்ள இவர், கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 ஜனவரி 1986 அன்று விிளையாடினார்.

இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே போல 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 1980களில் இந்திய அணியின் முக்கிய லெக் ஸ்பின்னராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : IPL 2026: சாம்சனுடன் ஒன்றாக அமர்ந்து பேசிய தோனி.. சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

கமெண்ட்ரியில் இருந்து விலகுவதாக லக்ஷ்மன் ராமகிருஷ்ணன் அறிவிப்பு

 

மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் தனது கமெண்ட்ரி பயணத்தை தொடங்கினார். தற்போது வரை நீண்ட காலமாக கமெண்டேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன்முறையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் முதன்முறையாக தமிழில் கமெண்ட்ரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றியுள்ளார்.

இதையும் படிக்க : IPL 2026: ஐபிஎல் பைனலில் தோல்வியே சந்திக்காத வீரர்கள்.. டாப் பட்டியலில் ரோஹித் சர்மா!

நிற பாகுபாடு காரணமா?

இந்த நிலையில் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் பிசிசிஐ கமெண்ட்ரியில் இருந்து விலகுவதாக அறிவித்தது கிரிக்கெட் உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு பின்னால் நிற பாகுபாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பிசிசிஐ கமெண்ட்ரியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து அவரது பதிவிற்கு ரசிகர் ஒருவர் நிற பாகுபாடு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்க அதற்கு ஆம் என்று ஒப்பக்கொண்டுள்ளார். மேலும் கடந்த 23 ஆண்டுகளாக டாஸ் மற்றும் பிரசென்டேஷன் நிகழ்ச்சிகளில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Follow Us