AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல்லில் ஒரு அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகள்.. முதலிடத்தில் யார்..?

Most Wickets For Single Team in IPL: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். நரைன் கடந்த 2012 முதல் 2025 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 192 போட்டிகளில் விளையாடி, 192 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவதாகவும், இந்தியர்களுக்கான பட்டியலில் முதலிடத்திலும் இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா.

IPL 2026: ஐபிஎல்லில் ஒரு அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகள்.. முதலிடத்தில் யார்..?
ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Mar 2026 08:00 AM IST

ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி நடைபெறவுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டு வருகின்றன. ஐபிஎல் போட்டிகள் பொதுவாக அதிக ரன்களைக் கொண்டிருக்கும், ஆனால் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கான (Batsmans) விளையாட்டு மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களுக்கானதும் கூட என்பதை பல சாதனைகள் காட்டுகின்றன. ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய வீரர்கள் மிகச் சிலரே. அதன்படி, இந்தியன் பிரீமியர் லீக்கில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியல் இதோ.

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக அணிகளுக்காக விளையாடிய 5 வீரர்கள்.. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் முதலிடம்!

ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகள்:

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். நரைன் கடந்த 2012 முதல் 2025 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 192 போட்டிகளில் விளையாடி, 192 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவதாகவும், இந்தியர்களுக்கான பட்டியலில் முதலிடத்திலும் இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா விளையாடி 183 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இலங்கை அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளரான லசித் மலிங்கா, தனது ஐபிஎல் வாழ்க்கையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 170 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மலிங்கா தற்போது ஓய்வு பெற்று பயிற்சியாளராக தொடர்கிறார். புவனேஷ்வர் குமார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 157 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக 150 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆவர். மேலும், இந்தப் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளவர்களில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? முதலிடத்தில் இந்த வீரரா?

ஒரு அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகள்:

  • சுனில் நரைன் – 192 விக்கெட்டுகள் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • ஜஸ்பிரித் பும்ரா – 183 விக்கெட்டுகள் – மும்பை இந்தியன்ஸ்
  • லசித் மலிங்கா – 170 விக்கெட்டுகள் – மும்பை இந்தியன்ஸ்
  • புவனேஷ்வர் குமார் – 157 விக்கெட்டுகள் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • ரவீந்திர ஜடேஜா – 143 விக்கெட்டுகள் – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • டுவைன் பிராவோ – 140 விக்கெட்டுகள் – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • யுஸ்வேந்திர சாஹல் – 139 விக்கெட்டுகள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Follow Us