பாமக வேட்பாளர்கள் யார் யார்… எந்த தொகுதியில் போட்டி… அன்புமணி அறிவிப்பு
Pmk Candidate List: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இதில், யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி என்பன உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டதுடன், அந்தந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3 பேரை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில். மீதமுள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி ராமதாஸ் இன்று திங்கள் கிழமை (மார்ச் 30) வெளியிட்டுள்ளார். இதில்,
மேலும் படிக்க: ஜனநாயகத்தின் தீர்ப்பு: தேர்தல் முடிவுகள் எப்படி வெளிவரும்?
- தர்மபுரி தொகுதி- சௌமியா அன்புமணி.
- பெரம்பூர் தொகுதி- திலகபாமா.
- திருப்போரூர் தொகுதி – கே. பாலு.
- உத்திரமேரூர் தொகுதி மகேஷ் குமார்.
- ரிஷிவந்தியம் தொகுதி செழியன்.
- காட்டுமன்னார்கோவில் தொகுதி அன்பு சோழன்.
- விருதாச்சலம் தொகுதி தமிழரசி ஆதிமூலம்.
- போளூர் தொகுதி சி. ஆர். பாஸ்கரன்.
- சேலம் வடக்கு தொகுதி எஸ். சதாசிவம்.
- விக்கிரவாண்டி தொகுதி சிவகுமார்.
- சோளிங்கர் தொகுதி சரவணன்.
- மயிலாடுதுறை தொகுதி சித்தமல்லி பழனிச்சாமி.
- உத்திரமேரூர் தொகுதி மகேஷ் குமார்.
- சேலம் வடக்கு தொகுதி சதாசிவம்.
- விக்கிரவாண்டி தொகுதி சிவகுமார்.
- சேலம் மேற்கு கார்த்தி.
- ஜெயங்கொண்டம் தொகுதி- வைத்தி.
- பென்னாகரம் தொகுதி- பாடி. வெ. செல்வம். ஆகிய 18 சட்டமன்ற தொகுதிகளில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும்
பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை எதிர்த்து பாமகவின் பொருளாளர் திலகபாமா போட்டியிட உள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா கூறுகையில், நான் பெரம்பூர் தொகுதியில் யாரை எதிர்த்தும் போட்டியிடவில்லை. மக்களுக்கு பணி செய்வதற்காக கட்சியின் தலைமை எனக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் எனக்கான பணியை மக்களுக்காக செய்வேன். ஒட்டுமொத்த தமிழகத்திலும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றப்படுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தலைமை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் நட்சத்திர தொகுதியாகும்
பெரம்பூர் தொகுதியை பொருத்தவரை அடிமட்டத்தில் வாழும் பொது மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் களப்பணி என்பது அனைவருக்கும் சவாலாகவே இருக்கும். நட்சத்திர தொகுதி என்பது அந்த தொகுதியில் வசிக்கும் மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற பட்டு இருந்தால் மட்டுமே, அது நட்சத்திர தொகுதி என்ற அந்தஸ்தை பெறும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தவெகவில் இணைந்த சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ்!