தவெகவில் இணைந்த சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ்!
Serial Actress Chandini Prakash Joined In TVK | சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தவெகவில் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுள்ள அவர், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன.
சென்னை, மார்ச் 30 : தமிழக வெற்றிக் கழகம் (TVK – Tamilaga Vettri Kazhagam) 2026 சட்டமன்ற தேர்தலில் (2026 Assembly Election) களம் காண உள்ள நிலையில், சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ் தவெகவில் இணைந்துள்ளார். அடிப்படை உறுப்பினராக இணைந்த அவர், தனது உறுப்பினர் அட்டையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ் தவெகவில் இணைந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ள தவெக
மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதை மையமாக கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிவித்தார். அதனை தொடர்ந்து தீவிர கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுவதாக அதன் தலைவர் விஜய் அறிவித்த நிலையில், வேட்பாளர் பட்டியலை தவெக வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க : காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி.. வெளியான விசிக வேட்பாளர் பட்டியல்
தவெகவில் இணைந்த சின்னத்திரை நடிகை
View this post on Instagram
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக மிக தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ் அந்த கட்சியில் இணைந்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தங்கபாண்டி என்பவருடன் இணைந்து பங்கேற்ற நிலையில், இவர் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானார். இதன் காரணமாக இவருக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
இதையும் படிங்க : தவெக விசில் சின்னம் பொறித்த 3,926 பாத்திரங்கள் பறிமுதல்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமறைவு.. போலீசார் வலைவீச்சு!
தீவிர சிம்பு ரசிகையான சாந்தினி தற்போது விஜயின் தவெகவில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு அடிப்படை உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனை சாந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.