AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொங்கு சட்டசபை என்றால் என்ன?.. அந்த சூழலில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்?

What is a Hung Assembly | பொதுவாக தேர்தல்களில் எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி தான் ஆட்சி அமைக்கும். அவ்வாறு அந்த கட்சி ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அந்த கட்சிக்கு மிகவும் அவசியம் ஆகும்.

தொங்கு சட்டசபை என்றால் என்ன?.. அந்த சூழலில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Mar 2026 21:56 PM IST

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. இதற்காக கட்சிலள் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் (DMK – Dravida Munnetra Kazhagam), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam), நாம் தமிழர் கட்சி (NTK – Naam Tamilar Katchi), தமிழக வெற்றிக் கழகம் (TVK – Tamilaga Vetri Kazhagam) என இந்த தேர்தல் பலமுனை போட்டியாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிவில் எந்த கட்சியும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை என்றால் என்ன ஆகும்?

தேர்தலில் ஒரு கட்சி 50 சதவீதம் வாக்குகளை பெற்று தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு 50 சதவீத வாக்குகளை பெற்றால் மட்டுமே அந்த கட்சி ஆட்சி அமைக்க முடியும். ஒருவேளை எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

இதையும் படிங்க : Edappadi Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் எடப்பாடி சட்டமன்ற தொகுதி.. இந்தமுறையும் வெற்றியை கைப்பற்றுவாரா எடப்பாடி பழனிசாமி?

தொங்கு சட்டசபை

தேர்தல் முடிந்து எந்த கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில், ஏற்படும் சூழல் தொங்கு சட்டசபை என அழைக்கப்படுகிறது. இந்த சூழலில் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.

கூட்டணி ஆட்சி முயற்சி

தேர்தல் முடிந்து தொங்கு சட்டசபை ( Hung Assembly) நிலை உருவாகும் பட்சத்தில் குடியரசு தலைவர் அல்லது மாநில ஆளுநர் அதிக இடங்களை பெற்ற கட்சியை அல்லது கூட்டணி அமைக்க கூடிய குழுவை ஆட்சி அமைக்க அழைப்பதற்கான அதிகாரம் உள்ளது.

மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம்

எந்த கட்சிகளும் பெரும்பான்மை பெறாத நிலையில், கூட்டணி ஆட்சியும் அமைக்க முடியவில்லை என்றால் தற்காலிகமாக குடியரசு தலைவர் ஆட்சி அல்லது ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்த சூழலில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க : S.Regupathy Tamil Nadu Elections 2026: தேசிய அரசியல் டூ மாநில அரசியல்.. மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா எஸ்.ரகுபதி!

தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், மேற்குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி ஆட்சி அமைக்க முடியும். இந்த தொங்கு சட்டசபை தேர்தலின் போது மட்டுமன்றி, ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போதும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழல் உருவாகும்போது அந்த கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றதாக கருதப்பட்டு ஆட்சி கவிழ்ப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us