AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டமன்ற தேர்தல்… ஒரே நேரத்தில் மு.க.ஸ்டாலின்-விஜய் வேட்பு மனு தாக்கல்!

M.K.Stalin-Vijay Nomination File: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கொளத்தூர் தொகுதியில் தனக்கான வேட்பு மனுவை திமுக தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதே போல, பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தல்… ஒரே நேரத்தில் மு.க.ஸ்டாலின்-விஜய் வேட்பு மனு தாக்கல்!
மு.க.ஸ்டாலின், விஜய் வேட்புமனு தாக்கல்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 30 Mar 2026 12:56 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று திங்கள்கிழமை ( மார்ச் 30) முதல் தொடங்கியது. இதில், திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மு. க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த 2011, 2016, 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்ற மு. க. ஸ்டாலின், தற்போது, 4- ஆவது முறையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்

திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு மக்கள் தரப்பில் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. கொளத்தூர் தொகுதி மக்களுக்கு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 3 சட்டமன்ற தேர்தலை விட தற்போது ஆதரவு அதிகமாக இருப்பதை கண் கூறாக பார்க்க முடிகிறது. திமுக கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். டெல்லிக்கும் தமிழகத்துக்குமான தேர்தல் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: பாமக வேட்பாளர்கள் யார் யார்… எந்த தொகுதியில் போட்டி… அன்புமணி அறிவிப்பு

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்

இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் விஜய் தான் போட்டியிட உள்ள பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆதவ் அர்ஜூனா- செங்கோட்டைன் வேட்பு மனு தாக்கல்

இதேபோல, தமிழக வெற்றி கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ள கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதே போல, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட உள்ள கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் தங்களது தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக சென்றுவிட்டனர். இதே போல, காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க: திருப்பத்தூரில் தோல்வியே கண்டிராத கே.ஆர்.பெரியகருப்பன்.. அமைச்சரவையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா!

Follow Us