AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

K.R. Periyakaruppan Tamil Nadu Election: திருப்பத்தூரில் தோல்வியே கண்டிராத கே.ஆர்.பெரியகருப்பன்.. அமைச்சரவையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா!

Tamil Nadu Elections 2026: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2006- ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4 முறை தோல்வி இன்றி வெற்றியை பதிவு செய்து வருகிறார். கே. ஆர்.பெரியகருப்பன். இவர், வரும் தொகுதியில் வெற்றியை தக்க வைத்து அமைச்சரவையில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்வாரா.

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 30 Mar 2026 11:59 AM IST
திமுகவில்  கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து வருபவர்  கே ஆர் பெரிய கருப்பன்.  இவர்,  1959-  ஆம் ஆண்டு  டிசம்பர் 30-ஆம் தேதி பிறந்தார்.  அரசியல் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இளமை காலத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தில்  தன்னை இணைத்துக் கொண்டார்.  கட்சியில் தொண்டனாக இணைந்தது முதல்  பல்வேறு கட்சி பணிகளை  மேற்கொண்டு வந்த  கே. ஆர். பெரிய கருப்பனுக்கு  2006 சட்டமன்றத் தேர்தலில்  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில்  போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

1 / 5
இதில்,  தனது முதல் வெற்றியை பதிவு செய்த கே ஆர் பெரிய கருப்பன் எம்எல்ஏவாக தேர்வாகி தமிழக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து,  2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட  கே. ஆர். பெரிய கருப்பன் 2-  ஆவது முறை வெற்றியை பதிவு செய்தார். பின்னர்  2016 சட்டமன்ற தேர்தல்  மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தனது வெற்றியே தொடர்ந்து நிலை நாட்டினார்.

2 / 5
அப்போது,  அவருக்கு  ஊரக வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.  கடந்த  2006 சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில்  களமிறங்கிய  கே ஆர் பெரிய கருப்பன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.கே.உமா தேவனை வீழ்த்தி 44.85 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியே பதிவு செய்தார். பின்னர்,  2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  இதே தொகுதியில்  களம் இறக்கப்பட்ட கே ஆர் பெரிய கருப்பன்  அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை வீழ்த்தி 48.25 சதவீத வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றார்.

3 / 5
2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களமாடிய கே ஆர் பெரிய கருப்பன் அதிமுக வேட்பாளர் கே ஆர் அசோகனை வீழ்த்தி 55.72 சதவீத வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார். இதே போல,  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருப்பத்தூர் பகுதியில்  போட்டியிட்ட கே ஆர் பெரிய கருப்பன்  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர்  மருது அழகுராஜை வீழ்த்தி 49 பாயிண்ட் 39 சதவீத வாக்குகள் பெற்று  வெற்றியை தனதாக்கி கொண்டார்.

4 / 5
அப்போது,  முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில்  கே ஆர் பெரிய கருப்பனுக்கு  கூட்டுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.  திருப்பத்தூர் தொகுதியில் தோல்வியின்றி  தொடர் வெற்றி பெற்று வரும் அவரது மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த தொகுதியிலும் வெற்றி அவரை வந்து சேரும் என்று  கூறுகின்றனர் திமுகவினர்.

5 / 5
Follow Us