AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சசிகலா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள்.. கேரளத்திலும் தடம் பதிக்கும் சின்னம்மா.. முழு விவரம் இதோ!

Sasikala Announces 23 Candidates : அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடக்கூடிய முதல் கட்டமாக 23 வேட்பாளர்களை கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். இதில், கேரளம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சசிகலா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள்.. கேரளத்திலும் தடம் பதிக்கும் சின்னம்மா.. முழு விவரம் இதோ!
சசிகலா கட்சி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 30 Mar 2026 06:36 AM IST

தமிழகத்தில் வருகிற 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்- பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. இதற்காக பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ளார். இதில், 23 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் 2 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மேலும் படிக்க: தவெக விசில் சின்னம் பொறித்த 3,926 பாத்திரங்கள் பறிமுதல்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமறைவு.. போலீசார் வலைவீச்சு!

அஇபுதமமுக கட்சி வேட்பாளர்கள் விவரம்:

  1. கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி- முன்னாள் அமைச்சர் எம். ஆனந்தன்.
  2. திருத்தணி தொகுதி- அரசு முன்னாள் தலைமை கொறடா பி. எம். நரசிம்மன்.
  3. மதுரை மத்திய தொகுதி- சக்கரவர்த்தி.
  4. சங்கரன்கோவில் (தனி) தொகுதி- முன்னாள் எம்பி வசந்தி முருகேசன்.
  5. திருமங்கலம் தொகுதி- ஜீவிதா நாச்சியார்.
  6. திருப்பரங்குன்றம் தொகுதி- தன பாண்டியன்.
  7. பரமக்குடி (தனி) தொகுதி- அமிர்தா பாலுசாமி.
  8. மேலூர் தொகுதி- சோனியா காந்தி.
  9. மானாமதுரை (தனி) தொகுதி- திலக்ராஜ்.
  10. முதுகுளத்தூர் தொகுதி – ராம்குமார் பாண்டியன்.
  11. ராஜபாளையம் தொகுதி- ஹரிஷ்.
  12. நாங்குநேரி தொகுதி- வெள்ளத்துரை ( ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி).
  13. குளச்சல் தொகுதி- கிறையஸ்ட் மில்லர்.
  14. சிவகங்கை தொகுதி- பிரபு.
  15. திண்டுக்கல் தொகுதி- ராமு தேவர்.
  16. சிவகாசி தொகுதி- நேஷனல் கணேசன்.
  17. மன்னார்குடி தொகுதி- ராசு பிள்ளை.
  18. மயிலாடுதுறை தொகுதி- சுதாகர்.
  19. திட்டக்குடி (தனி) தொகுதி பழனிவேல்.
  20. ஸ்ரீரங்கம் தொகுதி- விஜய்.
  21. திருச்சி கிழக்கு தொகுதி- நந்தகுமார்.
  22. ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி- புருஷோத்தமன்.

இதே போல, கேரளம் சட்டமன்ற தேர்தலில் தேவிகுளம் (தனி) தொகுதியில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தமிழர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 23. செல்லதுரை என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்து களம் காணும் சசிகலா-ராமதாஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட சசிகலா புதிதாக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, பாமக நிறுவனர் ராமதாசுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் சந்திக்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, தனது கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க: காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி.. வெளியான விசிக வேட்பாளர் பட்டியல்..

Follow Us