AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒட்டபிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி.. வெளியான புதிய தமிழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..

புதிய தமிழகம் கட்சி, அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்றும் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60–70 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்ட நிலையில், 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டபிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி.. வெளியான புதிய தமிழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Mar 2026 19:16 PM IST

சென்னை, மார்ச் 29, 2026: சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தலைவர் கிருஷ்ணசாமி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 43 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், புதிய தமிழகம் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை உள்ளிட்ட பல கட்சிகள் களத்தில் உள்ளன. மேலும் வி.கே. சசிகலா மற்றும் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான கூட்டணிகளும் போட்டியிடுகின்றன. எனினும், பிரதான போட்டி அதிமுக மற்றும் திமுக இடையே தான் நிலவுகிறது.

புதிய தமிழகம் கட்சி:

புதிய தமிழகம் கட்சி, அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்றும் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க: மகளிர்-முதியோர்-மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு…. திமுக வாக்குறுதி… மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60–70 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்ட நிலையில், 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய வேட்பாளர்கள்:

  • ஒட்டப்பிடாரம் – கிருஷ்ணசாமி
  • ஸ்ரீவில்லிபுத்தூர், நெல்லை – ஷ்யாம் கிருஷ்ணசாமி
  • வாசுதேவநல்லூர் – பால்ராஜ்
  • சங்கரன்கோவில் – பிரபாகரன்
  • கடையநல்லூர் – கவிதா
  • நாங்குநேரி – தமிழ்செல்வம்
  • விருதுநகர் – பாலசுப்பிரமணியன்
  • விளாத்திகுளம் – மாடசாமி
  • நிலக்கோட்டை – வழக்கறிஞர் சங்கர்
  • சோழவந்தான் – ரகு
  • பட்டுக்கோட்டை – குருமூர்த்தி
  • கோவில்பட்டி – அஜித் குமார்
  • ஸ்ரீவைகுண்டம் – ராஜா சுதன்
  • கெங்கவள்ளி – மாரிமுத்து
  • திருவெறும்பூர் – பிச்சைமுத்து
  • ஆத்தூர் – ஜெயபிரகாஷ்
  • ஆண்டிப்பட்டி – இளையராஜா
  • பெரியகுளம் – மாரிசாமி
  • போடி – கருப்புதுரை
  • அம்பாசமுத்திரம் – சோ. முத்து
  • பேராவூரணி – சித்திரைவேல்
  • முசிறி – சின்னையன்
  • மணப்பாறை – மீனா
  • கிருஷ்ணராயபுரம் – சுபாஷ்
  • திருவாரூர் – தியாகராஜன்
  • கீழ்வேளூர் – சுரேந்தர்
  • மன்னார்குடி – பாரதி
  • நாகை – ராஜசேகரன்
  • நன்னிலம் – தமிழ்செல்வி
  • ராதாபுரம் – முனுசாமி
  • பரமக்குடி – பிரகாஷ் பாண்டியன்
  • காரைக்குடி – நியூட்ரான் பாபு
  • மானாமதுரை – ராஜமாணிக்கம்
  • திருமயம் – சுப்பையா
  • விராலிமலை – செல்வராஜ்
  • புதுக்கோட்டை – ரங்கன்
  • தென்காசி – திருமலை குமார்
  • மதுரை (தெற்கு) – பாரதிராஜா
  • மேலூர் – பன்னீர்செல்வம்
  • சாத்தூர் – என். வேல்முருகன்
  • திருமங்கலம் – புண்ணியவதி
  • உசிலம்பட்டி – முருகேஸ்வரி

Follow Us