ஒரு இளைஞர், தனது தாயின் குழந்தைப் பருவ கிரிக்கெட் ஹீரோவை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்து, சாதாரண ஜிம் பயணத்தை மறக்க முடியாத தருணமாக மாற்றினார். ஹர்ஷித் சாஜ்ஜெட் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், தாயின் “பக்கெட் லிஸ்ட்” விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இந்த சர்ப்ரைஸை திட்டமிட்டதை காட்டுகிறார். ஆரம்பத்தில், அவர் தாயை ஜிம்மிற்கு அழைத்து செல்வார்; எதுவும் தெரியாமல் சுற்றிப் பார்க்கும் போது திடீரென முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் அங்கு தோன்றுகிறார்.