சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது!.. முக்கிய விதிகள் என்ன என்ன?
Assembly Election Nomination Started In Tamil Nadu | 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நாளான இன்றே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 30 : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான (2026 Assembly Election) வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இன்று சரியாக காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 06, 2026 அன்று முடிவடைய உள்ளது. வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தெர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இன்று (மார்ச் 30, 2026) முதல் ஏப்ரல் 06, 2026 வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களால் உதயமான 9 கட்சிகள்… யார் தொடங்கினார்கள்.. முழு விவரம்!
வேட்புமனு தாக்கல் செய்ய என்ன என்ன விதிமுறைகள்?
- வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
- வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக மூன்று வாகனங்களில் மட்டுமே வர வேண்டும்.
- வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக வாகனங்களை வேட்புமனு தாக்கல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர்கள் இடைவெளியில் நிறுத்த வேண்டும்.
- வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் மூன்று நபர்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி.
இதையும் படிங்க : சசிகலா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள்.. கேரளத்திலும் தடம் பதிக்கும் சின்னம்மா.. முழு விவரம் இதோ!
வேட்புமனு தாக்கலுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்
வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம். அதன்படி,
- பொது வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது டெபாசிட் கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும்.
- எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது டெபாசிட் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.
வேட்பாளர்கள், அலுவலகங்களுக்கு சென்று மட்டுமன்றி https://suvidha.cci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 8 நாட்கள் காவல் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தாலும், அதில் நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் மீதமுள்ள நாட்களில் வேட்பாளர்கள் தங்களது வேட்புனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.