வியட்நாமில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 79 வயதான முதியவர் ஒருவரை விஷம் கொண்ட கோப்ரா பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு கை மட்டுமே உள்ள அந்த முதியவர், அவரை கடித்த அந்த பாம்பை பிடித்து, அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தகவலின்படி, காலை நேரத்தில் அந்த முதியவரை கோப்ரா பாம்பு தாக்கியுள்ளது. ஆனால் பயப்படாமல், அதனை பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்ற அவர், பின்னர் குடும்பத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.