ஜப்பானில் இருந்து வந்த ஒரு கியூட் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானை சேர்ந்த குட்டி குரங்கு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விலங்குக் காட்சிச்சாலையில் வாழும் இந்த குட்டி குரங்கு, பிறந்ததும் தாயால் நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு, தனிமையை சமாளிக்க ஒரு பொம்மையை கட்டிப்பிடித்து இருந்ததால் அது இணையத்தில் வைரலானது. ஆனால் தற்போது, அந்த குரங்கின் வாழ்க்கையில் ஒரு இனிமையான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெண் குரங்குடன் அது தொடர்பை உருவாக்கியுள்ளது. இருவரும் சேர்ந்து விளையாடுவது, அணைத்துக் கொள்வது, கிஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.