AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

Gold Price: தங்கத்தின் விலை சரிந்துள்ள அதே வேளையில், வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமிற்கு உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 295க்கும், கிலோவுக்கு 5,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 May 2026 11:39 AM IST

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று சரிவைச் சந்தித்துள்ளது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று (மே 22) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 வரை குறைந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, உலகளாவிய சந்தை மாற்றங்களின் காரணமாக இன்று சரிவை நோக்கி நகர்ந்துள்ளது.

இதையும் படிங்க: ஆதார் அப்டேட் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

தங்கம் விலை நிலவரம்:

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 30 குறைந்து ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் 118,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தின் விலை சரிந்துள்ள அதே வேளையில், வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமிற்கு உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 295க்கும், கிலோவுக்கு 5,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை மாற்றத்திற்கான காரணம்:

சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்திற்கான தேவை தற்காலிகமாகச் சற்று குறைந்தது போன்ற காரணங்களால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் திருமணச் சுபமுகூர்த்த தினங்கள் நெருங்கி வரும் வேளையில், தங்கத்தின் இந்த விலை குறைவு நகைப் பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: மொத்த Vs தனித்தனி FD முதலீடு.. இரண்டில் எதில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும்?

தங்கம் வாங்குவதில் சிக்கல்:

ஏற்கனவே மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இந்திய பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, அந்நிய செலாவணியை கட்டுப்படுத்த ஒரு ஆண்டுக்கு தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

Follow Us