AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம்!

Gold and Silver Price Increased In Chennai | சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்வை சந்தித்துள்ளது. ஈரான் போர் காரணமாக நாளுக்கு நாள் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று உயர்வை சந்தித்துள்ளது.

Gold Price : தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 May 2026 11:06 AM IST

சென்னை, மே 21 : உலக அளவில் நிலவும் புவிசார் பதற்றங்கள் காரணமாக தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம், வெள்ளி விலையில் எதிரொலிக்கும் மேற்கு ஆசிய போர்

மேற்கு ஆசியா போர் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. குறிப்பாக புவிசார் பதற்றங்கள் அதிகரித்து வருவது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டு வருகின்றன. இந்த சிக்கல்கள் தங்கத்தின் மீது எதிரொலிப்பதன் காரணமாக தங்கம் விலையும் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : இத்தாலி பிரதமருக்கு மெலோடி சாக்லேட் பரிசளித்த பிரதமர்.. உடனே நடந்த மாற்றம்.. பார்லே பங்குகள் அதிரடி உயர்வு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,810-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.290-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : ஆதார் அப்டேட் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யடுகின்றன.

Follow Us