லெபனான் – இஸ்ரேல் இடையே மேலும் 3 வாரங்களுக்கு போர் நிறுத்தம்.. டிரம்ப் அறிவிப்பு!
Three More Weeks Ceasefire Between Israel and Lebanon | ஈரான் - இஸ்ரேல் போரில் ஈரானுக்கு ஆதரவாக லெபனான், இஸ்ரேலை தாக்கியது. இதன் காரணமாக இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடும் மோதல் நிலவியது. இந்த நிலையில், மூன்று வாரங்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
வாஷிங்டன், ஏப்ரல் 24 : இஸ்ரேல் மற்றும் லெபனான் (Israel and Lebanon) இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் இருந்த நிலையில், அது தற்போது மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனான் களம் இறங்கிய நிலையில், அது இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே மோதலை உருவாக்கியது. இந்த நிலையில் தான் டிரம்ப் இதனை அறிவிதுள்ளார்.
இஸ்ரேல் – லெபனான் இடையே உருவான மோதல்
அணு ஆயுதங்கள் தயாரிக்கு விவகாரம் தொடர்பாக பிப்ரவரி அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் ஈரான் நடத்தியது. இவ்வாறு மூன்று நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நீடித்து வந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக லெபனான் களம் இறங்கியது.
இதையும் படிங்க : மீண்டும் பேச்சுவார்த்தை.. இஸ்லாமாபாத் செல்லும் வேன்ஸ்.. ஓகே சொல்லுமா ஈரான்?
அதாவது ஈரானுக்கு ஆதரவாக லெபனான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், லெபனானின் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இடையே ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அப்போது தாக்குதலை நிறுத்த லெபனான், இஸ்ரேலை வலியுறுத்தி வந்தது. அப்போது தான் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்தார்.
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்போது மேலும் மூன்று வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வர உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கூறியுள்ள அவர், இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதரக அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். இந்த உயர்மட்ட கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க : US – Iran Talk: தொடரும் பேச்சுவார்த்தை பஞ்சாயத்து.. இறங்கி வராத ஈரான்.. குழப்பத்தில் அமெரிக்கா!
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தம் நீட்டிக்க உடன்பாடு ஏற்பட்டது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



