ஜப்பானில் 7.4 அளவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 7.4 ஆகப் பதிவாகியுள்ளது. இதன் மையப்புள்ளி, சன்ரிகு கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்க்கலாம்
ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி சன்ரிகு கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டராக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வைத் தொடர்ந்து ஜப்பான் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது. ஹொக்கைடோ மற்றும் இவாத்தே பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரு பகுதிகளிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஜப்பானில், ரிக்டர் அளவுகோலில் 7-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் தீவிரமாகக் கருதப்படுகின்றன.
ஜப்பானின் பிரதான தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கி.மீ தொலைவில் சுனாமி ஏற்பட்டிருப்பதை வானிலை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளதாக, ஜப்பானின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜப்பான் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒனாகவா அணுமின் நிலையத்தில் ஏதேனும் அசாதாரண நிகழ்வுகள் உள்ளதா என உள்ளூர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சி, மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் குடிமக்கள் பொறுமையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.