AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போர் நிறுத்த உடன்பாடுகளை மீறினால் பதிலடி.. இஸ்ரேலை எச்சரித்த ஹிஸ்புல்லா அமைப்பு!

Hezbollah Warns Israel On Ceasefire | லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில், போர் நிறுத்த விதிகளை மீறினால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் நிறுத்த உடன்பாடுகளை மீறினால் பதிலடி.. இஸ்ரேலை எச்சரித்த ஹிஸ்புல்லா அமைப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Apr 2026 10:35 AM IST

பெய்ரூட், ஏப்ரல் 19 : போர் நிறுத்த உடன்பாடுகளை மீறினால் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு (Israel), ஹிஸ்புல்லா (Hezbollah) எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹிஸ்புல்லா இவ்வாறு கூறியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து ஹிஸ்புல்லா கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

லெபனான் – இஸ்ரேல் இடையே நிலவி அமலுக்கு வந்த போர் நிறுத்தம்

அணு ஆயுதங்களை தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக ஈரான் மீது பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், அது போராக வெடித்தது. இந்த நிலையில் தான், ஈரானுக்கு ஆதரவாக லெபனான் களமிறங்கியது. அது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடித்து வந்தது.

இதையும் படிங்க : இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம்.. டிரம்ப் அறிவிப்பு!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தான், உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என லெபனான் இஸ்ரேலிடம் கோரியது. இதனை அடுத்து லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இஸ்ரேலை எச்சரித்த லெபனான்

இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் நேற்று (ஏப்ரல் 18, 2026) கூறும்போது, அமைதி ஏற்பட வேண்டும் என்றால் அது இரு தரப்பிலும் சரியாக கடைபிடிக்க வேண்டும். வான், நிலம் மற்றும் கடல் வழியான தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் 10 நாள் போர் நிறுத்தம் தொடரும்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு நெருக்கடி.. ரஷ்யா – ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கான அமெரிக்காவின் சலுகை ரத்து!

லெபனான் பிராந்தியத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுவதையும் வாபஸ் பெற வேண்டும். சிறை கைதிகள் விடுவிப்பு, எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடியிருப்பு வாசிகள் திரும்புவது உள்ளிட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். போர் நிறுத்த உடன்பாடு என்றால் அனைத்து வித போர் நடவடிக்கைகளும் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அர்த்தம்.

விதமீறல்கள் ஏற்பட்டால் அதற்கு ஏற்ப களத்தில் இருக்கும் எங்களுடைய போர் தடுப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us