AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி!

PM Modi Talk With America President Donald Trump | இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடல் சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Apr 2026 21:02 PM IST

புதுடெல்லி, ஏப்ரல் 14 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi),  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) உடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடல் சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆசியாவில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அது தொடர்பான இரு நாட்டு தலைவர்களின் இந்த உரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டிரம்ப் உடனான பிரதமர் மோடியின் உரையாடலின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாளுக்கு நாள் தீவிரமடையும் மேற்கு ஆசிய போர்

அணு ஆயுதங்கள் தயாரிக்கும் விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து பிப்ரவரி 28, 2026 அன்று தாக்குதல் நடத்த தொடங்கியது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க தொடங்கிய நிலையில், மேற்கு ஆசியாவில் போர் வெடித்தது. இந்த போர் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் காரணமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடிய நிலையில், அதன் காரணமாக உலக நாடுகள் எண்ணெய் தட்டுப்பாடால் ஸ்தம்பித்த நிலையில், அது போரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : நிலவை நோக்கிய பயணத்தில் புதிய வரலாறு.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஆர்டிமிஸ் 2 விண்வெளி வீரர்கள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா பலமுறை ஈரானிடம் கூறியபோது, ஈரான் அதற்கு இசைவு தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த இறுதி எச்சரிக்கை முடிவடைவதற்கு ஒருசில நிமிடங்கள் இருந்த நிலையில், பாகிஸ்தான் தலையிட்டு ஈரான் சார்பாக பேசிய நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா கால அவகாசம் வழங்கியது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேசிய பிரதமர் மோடி

ஈரான் மீதான போர் நிறுத்தம் தற்போது அமலில் உள்ள நிலையில், மேற்கு ஆசிய போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் பதற்றங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளனர். மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டவும், பதற்றங்களை குறைக்கவும் இந்தியா முழு ஆதரவையும் வழங்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us