AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கத்தார் எரிவாயு ஆலை விபத்து: 3 தமிழர்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்

கத்தார் எரிவாயு ஆலை விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது. அதில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பவித், பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் ஆகிய 3 தமிழர்களும் மரணமடைந்துள்ளனர்.

கத்தார் எரிவாயு ஆலை விபத்து: 3 தமிழர்கள்  மரணம் – அதிர்ச்சி தகவல்
கத்தார் எரிவாயு ஆலை விபத்து
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Jun 2026 08:57 AM IST

கத்தார் எரிவாயு ஆலை விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது. அதில், நெல்லை ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பவித், பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் ஆகிய 3 தமிழர்களும் மரணமடைந்துள்ளனர். எரிவாயு ஆலை விபத்தில் காயமடைந்த 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொழிலாளர்களின் இறப்புக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கத்தார் எரிவாயு ஆலை விபத்தில் 3 தமிழர்கள் மரணம்

கத்தாரின் நாட்டில் உள்ள பர்சான் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்ததாகவும், 13 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்பதும் அதில் 3 தமிழர்களும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பவித், பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் ஆகிய 3 தமிழர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : “உலகத் தலைவர்களில் யாரை அதிகம் பிடிக்கும்?”.. பிரதமர் மோடியை கைகாட்டிய டிரம்ப்!

இந்திய தூதரகம் பகிர்ந்த தகவல்

 

இது தொடர்பாக கத்தாரின் தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஜூன் 21, 2026 அன்று இரவுராஸ் லஃப்பான் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 12 இந்தியர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததை கத்தார் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறோம்.

இதையும் படிக்க : ஈரான் – அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை ரத்து.. காரணம் என்ன?

இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் தற்போது சீரான உடல்நிலையுடன் இருப்பதையும், அவர்களுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதையும் கத்தார் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும், குறிப்பாக உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்யவும் எங்கள் தூதரகம் கத்தார் அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us