AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தென் கொரியாவின் காஸ்ட்லியான விவாகரத்து.. ரூ.17,000 கோடி செட்டில்மென்ட்.. கேமிங் நிறுவனத்தின் நிறுவனருக்கு கோர்டு அதிரடி!

Costliest Divorce Settlement In South Korea | பொதுவாக விவாகரத்தில் கணவன், மனைவிக்கு செட்டில்மெண்ட் வழங்குவது குறித்து நீதிமன்றம் உத்தரவிடும். இந்த நிலையில் தான், தென் கொரியாவில் ஒரு விவாகரத்து வழக்கில் கணவன், மனைவிக்கு 2.5 ட்ரில்லியன் யென் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ள்ளது.

தென் கொரியாவின் காஸ்ட்லியான விவாகரத்து.. ரூ.17,000 கோடி செட்டில்மென்ட்.. கேமிங் நிறுவனத்தின் நிறுவனருக்கு கோர்டு அதிரடி!
ஹியுக்-பின்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Sep 2026 23:53 PM IST

சியோல், செப்டம்பர் 10 : விவாகரத்தின் போது கணவன் மனைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இது கணவரின் பொருளாதாரத்தை பொருத்தும், நீதிமன்றத்தின் விசாரணையை பொருத்தும் மாறுபடும். சில விவாகரத்து வழக்குகளில் மனைவி செட்டில்மெண்ட் பெற தகுதி இல்லாதவர் என்பதையும் நீதிமன்றங்கள் தீர்பாக வழங்கியுள்ளன. இந்த நிலையில் தான், தென் கொரியாவின் (South Korea) மிகவும் காஸ்ட்லியான விவாகரத்து (Costliest Divorce) பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விவாகரத்து வழக்கு – மனைவிக்கு ரூ.17,000 கோடி வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

தென் கொரியாவின் பிரபல ஸ்மைல்கேட் கேமிங் நிறுவனத்தின் நிறுவனரான குவான் ஹியுக்-பின், தனது மனைவியுடன் விவாகரத்து வழக்கில் சுமார் 2.55 டிரில்லியன் வான் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடிக்கும் அதிகம் ஆகும்) சொத்து பங்கீடாக வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுள்ளார். தென் கொரியா விவாகரத்து வாழக்குகளிலேயே அதிக தொகையை செட்டில்மெண்டாக கொண்ட விவாகரத்து வழக்கு இதுவாகும். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பலரையும் வாய் பிளக்க செய்துள்ளது.

இதையும் படிங்க : காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி!

விவாகரத்து வழக்கின் பின்னணி

ஹியுக்-பின் ஸ்மைல்கேட் கேமிங் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பிளாக்பஸ்டர் துப்பாக்கிச்டுதல் விளையாட்டான கிராஸ்பயர் மற்றும் லாஸ்ட் ஆர்க் ஆகிய விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவையாக உள்ளன. இது மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையில், இதன் முழு பங்குகளும் ஹியுக்-பின் வசம் தான் இருந்தது. இந்த நிலையில் தான், அவர் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படிங்க : வெடித்து சிதறிய எரிமலை.. 50ஆயிரம் அடி உயர்ந்த சாம்பல்.. இந்தோனேஷியாவில் சம்பவம்

தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரது மனைவி 2022 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரிய நிலையில், சொத்து பிரிப்புக்கும் கேட்டுள்ளார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கு நேற்று நிறைவடைந்த நிலையில், தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அப்போதுதான், நீதிமன்றம் ஹியுக்-பின்-க்கு இந்த தீர்ப்பை அளித்தது.

Follow Us