Viral Video : இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. வைரல் வீடியோ!

Young Man Misbehaved With Woman | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்த இளம் பெண்ணை, இளைஞர் ஒருவர் தவறாக தொடும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

11 Apr 2026 16:33 PM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில குற்ற சம்பவங்கள் தொடர்பானதாக இருக்கும். இவ்வாறு வைரலாகும் குற்ற சம்பவங்கள் தொடர்பான  வீடியோக்கள் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்த சம்பவங்களும் உள்ளன. அந்த வகையில், இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருக்கும் இளம் பெண் ஒருவரிடம் இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைராலகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜெய்ப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்த இளம் பெண் ஒருவரை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பாலியல் சீண்டல் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : சாலையோரம் சண்டை போடும் எலிகள்.. கைதட்டி உற்சாகப்படுத்தும் ஆண்கள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் ஸ்கூட்டரின் பின்னாள் அமர்ந்து பயணம் செய்துக்கொண்டு இருக்கிறார். அந்த வாகனத்தை தொடர்ந்து மற்றொரு வாகமும் செல்கிறது. அதன் பின்னாள் அமர்ந்திருக்கும் இளைஞர் அந்த இளம் பெண்ணை தவறாக தொடுகிறார். அதனால், கடும் கோபத்திற்கு உள்ளான அந்த இளம், அந்த நபரை பிடிக்க முயலுகிறார். ஆனால், அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுவிடுவிகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பாராசெய்லிங் செய்யும்போது கயிறு அறுந்து விழுந்த நபர்.. பரபரப்பு வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த இளைஞர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?